வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு - ஆர்.எஸ் பாரதிக்கு நிபந்தனை ஜாமீன்
Chennai high court : ஆர்.எஸ்.பாரதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 10 ஆயிரம் ரூபாய் உத்தரவாதம் அதே தொகைக்கு இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
Chennai high court : ஆர்.எஸ்.பாரதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 10 ஆயிரம் ரூபாய் உத்தரவாதம் அதே தொகைக்கு இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
Tamil News Today Live : ஆர். எஸ் பாரதி ஜாமீன் வழக்கு
சென்னையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்துக்கு எதிராக, ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி (மே) காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு, மே 31ம் தேதி வரை இடைக்கால முன் ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisment
இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன் ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி நீர்மல்குமார் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய மறுத்துவிட்டார். இடைக்கால ஜாமீன் அளித்த முதன்மை அமர்வு நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்ய கோரிய மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தார். மேலும் விசாரணை நீதிமன்றத்தில் ( சென்னை முதன்மைஅமர்வு) ஆர்.எஸ்.பாரதி சரணடையும் தினத்தில் அவரின் ஜாமீன் மனுவை பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். பின்னர் இந்த வழக்கில் ஜாமீன் கோரி பாரதி சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது.
Advertisment
Advertisements
ஜாமீன் வழங்க காவல்துறை மற்றும் புகார் தரார் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்டது. இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் பிறகு தீர்ப்பை நீதிபதி செந்தில் குமார் தள்ளிவைத்தார்.
இந்நிலையில் இன்று மாலை தீர்ப்பளித்த நீதிபதி செந்தில்குமார், ஆர்.எஸ்.பாரதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 10 ஆயிரம் ரூபாய் உத்தரவாதம் அதே தொகைக்கு இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil