சென்னையில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்திப்பு பேசினார். அப்போது அ.தி.மு.க பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு பதிலளித்தார். அவர் பேசுகையில், அதிமுக ஆட்சியில்தான் அதிக ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்; சென்னை ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு குற்றங்கள் குறைந்துள்ளன.
தனிப்பட்ட காரணங்களுக்கான கொலைகளை வைத்து சட்டம் ஒழுங்கு சீர்கேடு என சொல்ல முடியாது. 2022-23இல் தமிழ்நாட்டில் 1500 கொலைகள் நடந்துள்ளன. இது அதிமுக ஆட்சியை விட குறைவு. ஆம்ஸ்ட்ராங் கொலையை பெரிதுபடுத்திய எதிர்க்கட்சிகளுக்கு விக்கிரவாண்டி இடைத் தேர்தல் முடிவே பதில். தூத்துக்குடியில் நடைபெற்றது சட்ட ஒழுங்கு பிரச்னையில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடைசி காலத்தில் வாழ்ந்தது கொடநாட்டில்தான். அங்கு நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவங்கள் அதிமுக ஆட்சியில்தான் நடைபெற்றது.
2016ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் திருப்பூர் அருகே ரூ.570 கோடி கன்டெய்னர் லாரி பிடிபட்டது. அப்போது அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சிபிஐ விசாரணை வேண்டுமென உத்தரவு கூறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை தொடங்கி இருக்கிறதா என சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கவேண்டும்.
எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணையை நாங்கள் கோரவில்லை. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணையை வரவேற்கும்
எடப்பாடி பழனிசாமி. தன்மீதான சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று தடை வாங்கியது ஏன்?
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்ற இபிஎஸ் கருத்து தெரிவித்திருந்தார்.
கள்ளகுறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மனசாட்சியை அடகுவைத்துவிட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டார்கள் என்று ஆர்.எஸ் பாரதி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“