scorecardresearch

மு.க. ஸ்டாலின் இல்லாத நேரத்தில் ரெய்டு: தி.மு.க ஒருபோதும் அஞ்சாது: ஆர்.எஸ் பாரதி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு சென்றுள்ள நிலையில் இந்த ஐ.டி. ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இதெற்கெல்லாம் தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது என கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார்.

RS Bharati said that DMK is not afraid of IT raids
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

மதுவிலக்கு, ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இன்று (மே 26) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்ற போது அவர்களின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி இது தொடர்பாக சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “சிபிஐ, வருமான வரி, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டுகின்றனர். எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே ரெய்டுகள் நடத்தப்படுகின்றன.

சோதனைகளை பார்த்து திமுக என்றைக்குமே அஞ்சியது இல்லை. தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடு தொடர்பான செய்திகளை திசை திருப்பவே ரெய்டு நடைபெறுகிறது.
மேலும் இந்த ரெய்டு ஓர் பழிவாங்கும் நடவடிக்கை. மு.க. ஸ்டாலின் இல்லாத நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது. இது போன்ற ரெய்டுகளுக்கெல்லாம் திமுக ஒருபோதும் அஞ்சாது” என்றார்.

தொடர்ந்து, கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற்று தந்த செந்தில் பாலாஜியை குறிவைத்துளளனர் என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Rs bharati said that dmk is not afraid of it raids