காவல்துறை தலைவராக இருந்தபோது கவர்னர் ஆர்.என். ரவியை, சைலேந்திர பாபு ராஜ்பவனில் சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாட்டின் காவல்துறை தலைவராக இருந்தவர் சலேந்திர பாபு. இவரை தமிழநாடு அரசு தேர்வாணையத்தின் தலைவராக திமுக அரசு திட்டமிட்டது. அதற்கான பரிந்துரையை கவர்னருக்கு அனுப்பியது. ஆனால் கவர்னர் கையெழுத்தி்ட மறுத்துவிட்டார். இதில் சில கேள்விகளை திமுக அரசிடம் கேட்டுள்ளார்.
Advertisment
இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக பேசிய ஆர்.எஸ் பாரதி, “ஆளுனர் ஆர்.என். ரவி கேட்ட விளக்கங்களுக்கு ஏற்னவே பதில் அளித்து ஒரு மாதம் ஆகிவிட்டது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அதிமுகவினரையே டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமித்தார். ஆனால் நாங்கள் அப்படியெல்லாம் செய்யாமல் அரசியலுக்கு அப்பார்பட்ட அனுபவம் மிக்கவரான சைலேந்திரபாபுவை நாங்கள் பரிந்துரை செய்தோம்.
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி
ஆனால் ஆளுனர் ஆர்.என். ரவி போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இதனை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம். மேலும் ஆளுனர் திட்டமிட்டு குழப்பம் விளைவிக்கிறார். சென்னை தினத்தை மெட்ராஸ் டே என்கிறார். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
Advertisment
Advertisements
கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சியில் பல தவறுகள் நடந்துள்ளன. அப்படியெல்லாம் நடக்க கூடாது என்பதற்காகத்தான் இந்த நியமனத்தை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. ஆகவே ஆளுநர் மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் இதுவரை டி.என்.பி.எஸ்.சி தலைவராக வரவில்லை. எனவே சமூகநீதி நோக்கத்தோடு சைலேந்திர பாபுவை முதலமைச்சர் நியமித்துள்ளார்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“