Dmk | Rs Bharathi | தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கடலூரில் இன்று (மார்ச் 4, 2024) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இந்திய அளவில் கவனம் ஈர்த்துவருகிறது.
எடப்பாடி பழனிசாமியால் அரசியல் நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை; தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் இருப்பதாக போராட்டம் செய்கிறார்.
அ.தி.மு.க ஆட்சியின்போது குஜராத் அதானி துறைமுகத்தில் 3,300 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. அதை கண்டித்து போராட்டம் நடத்தவில்லை.
இதை செய்தது அனைவரும் பா.ஜனதா கட்சியினர். மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் பொறுப்பில் இருந்த டிஜிபி ராஜேந்திரன், ஆணையர் ஜார்ஜ், அமைச்சர்கள் விஜய பாஸ்கர், ரமணா உள்ளிட்டோர் மீதும் குட்கா வழக்கு உள்ளது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்திவருகிறது.
இவர்கள் மீது கட்சி ரீதியாக எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அதிமுக ஆட்சியின்போது கைப்பற்றப்பட்ட ரூ.570 கோடி கண்டெய்னர் விவகாரத்தில் திமுக தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் என்எல்சி விவகாரத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் திமுக நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
மேலும், “தமிழ்நாட்டை ஒழிக்க வேண்டும்; அழிக்க வேண்டும் என்பதற்காகவே ஈனுலைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கல்பாக்கம் அணு உலைத் திட்டம் ஆபத்தானது என்பதால் இது தொடர்பாக விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“