2023-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் செயல்படுத்தும் பணிகள், திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ் செய்ய பணிகள், செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்த இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தில், மக்களிடையே ஆர்.எஸ்.எஸ்ஸின் செல்வாக்கை மேம்படுத்துதல், தேசியக் கல்வி கொள்கையை (என்இபி) வலுப்படுத்தல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் சந்திக்கும் பிரச்சினைகள், அமைப்பு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்பட வேண்டிய மக்கள் நட்பு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டம் திட்டங்களை இறுதி செய்ய உதவும் என அந்த அமைப்பின் மூத்த தலைவர் தெரிவித்தார்.
மேலும், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகள், பணிகள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றார். இந்த கூட்டத்தில் பா.ஜ.க மற்றும் சங்பரிவார் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள், 75-வது ஆண்டு சுதந்திரம், காந்தி ஜெயந்தி ஆகியவற்றை முன்னிட்டு கடந்த அக்டோபர் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து நவம்பர் 6-ம் தேதி ஊர்வலம் நடந்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் நீதிமன்றம் சில நிபந்தனைகள் விதித்ததையடுத்து ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை ஒத்திவைத்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil