நாமக்கல் தில்லைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(54). இவர் திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை பிரிவில் பணியாற்றி வந்தார். சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றிய இவர் 6 மாதங்களுக்கு முன் இடமாறுதல் மூலம் திருச்சி சென்றார்.
திருச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றிய சுப்பிரமணி மற்றும் ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய பிரமிளா இருவரும் இன்று அதிகாலை வகுரம்பட்டி பகுதியில் ரயில் முன்பு விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டனர். இருவரது உடல்களைக் கைப்பற்றிய ரயில்வே போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், இவர்களது மகள் திருமணத்தில் பெற்றோருக்கும் அவருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அவர், திருமணம் வேறு ஒருவரை செய்ய முடிவு எடுத்துள்ளதால் இருவரும் இந்த விபரீத முடிவு எடுத்ததாகத் தகவல் கூறப்படுகிறது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
செய்தி: க.சண்முகவடிவேல்