வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTOs) ஊழியர்கள் மற்றும் முகவர்கள் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க, தமிழகம் முழுவதும் வாகனங்களுக்கு 47 தானியங்கி சோதனை நிலையங்களை (Automatic testing stations) அமைக்க அரசு முன்வந்துள்ளது. இதில் நான்கு சென்னையில் அமைக்கப்படும்.
மனித தலையீடு இல்லாமல் வாகனங்களுக்குத் தகுதிச் சான்றிதழ் (fitness certificates) வழங்கக்கூடிய இந்த நிலையங்கள் குரோம்பேட்டையில் உள்ள பெருநகரப் போக்குவரத்துக் கழக (MTC) பயிற்சிப் பள்ளி, தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்துக் கழக (IRT) வளாகத்திலும், திருவொற்றியூர் அல்லது எண்ணூரில் உள்ள அரசுப் பேருந்து நிலையத்திலும் வர வாய்ப்புள்ளது.
இது தவிர, பார்க் டவுனில் உள்ள பல்லவன் சாலையில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) டிப்போவில் நான்காவது தானியங்கி சோதனை நிலையம்(ATS) வரலாம்.
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சக வழிகாட்டுதல்களின்படி, பிரேக்கிங் சிஸ்டம், ஹெட்லேம்ப், பேட்டரி, டயர், ரெட்ரோ-ரிஃப்ளெக்டிவ் டேப் மற்றும் ஸ்பீடோமீட்டர் உட்பட 40 வெவ்வேறு அளவுருக்களை ஒரு சிறந்த தானியங்கி சோதனை நிலையம் (ATS) சோதிக்க முடியும்.
ஒரு வாகனம் மூன்று சோதனைகளில் (ஜாயிண்ட்-ப்ளே, சஸ்பென்ஷன் மற்றும் சைட்-ஸ்லிப் போன்றவை) தோல்வியுற்றால், RTO வாகனத்தை 'தகுதியற்றது' என்று அறிவிக்கும், பிறகு வாகன உரிமையாளர் 30 நாட்களுக்குள் மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த எஸ்.அன்பழகன் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், வாகனத் தகுதிச் சான்றிதழைப் புதுப்பிக்க ஒவ்வொரு முறையும் ஆர்.டி.ஓ.வை அணுகும் போது, ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 500 வீதம் முகவர்கள் கோருகின்றனர்.
ஒருவேளை பணம் கொடுக்காவிட்டால், சோதனைகளில் நம்மைத் தோல்வியடையச் செய்வதற்கான காரணங்களை கண்டுபிடிப்பார்கள். முழு சோதனை செயல்முறையும் தானியங்கி முறையில் இருந்தால், முகவர்களுக்கு பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை, என்று அவர் கூறினார்.
பல கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டாலும், அரசு போக்குவரத்து துறையால் போதிய நிலம் கண்டறிய முடியாமல் இழுபறியில் இருந்தது.
வியாழக்கிழமை, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஆணையர் சண்முகசுந்தரம் கடிதம் மூலம், அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குநர்களும் கள ஆய்வு செய்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.