சென்னை வாலிபர் தண்ணீருக்குள் அமர்ந்து 2 நிமிடங்களில் 6 கியூப்களை விளையாடி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
Advertisment
ஒரே நேர்கோட்டில் நிறங்களை ஒன்றிணைக்கும் ‘ரூபிக்ஸ் கியூப்' விளையாட்டை உலகம் முழுவதும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமாக விளையாடி வருகின்றனர்.
இதுவரை 5 கியூப்களை விளையாடி இருந்ததே, உலகசாதனையாக இருந்த நிலையில், சென்னையை சேர்ந்த வாலிபர் இளையராம் சேகர் , 2 நிமிடம் 17 வினாடிகளில் 6 கியூப்களை சேர்த்து கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இவர், இந்த சாதனையை, ஆகஸ்ட் 1ம் தேதி, நிகழ்த்தியுள்ளார். இது .உலக சாதனை என்று Guinness World Records Ltd. அமைப்பு அங்கீகரித்துள்ளது.
இந்த முயற்சி குறித்த இளையராம் சேகர் கூறியுள்ளதாவது, நான் 2013ம் ஆண்டில் கல்லூரிப்பருவத்தில் இருந்தே, ரூபிக்ஸ் கியூப் விளையாடி வருகின்றேன். தண்ணீருக்குள் அமர்ந்து ரூபிக்ஸ் கியூப் விளையாடி உலக சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம், எனக்கு அப்போதிலிருந்தே இருந்துவந்தது. இதற்காக, தீவிர பயிற்சி எடுத்துக்கொண்டேன்.
2019ம் ஆண்டில் மும்பை வாலிபர் கியூப்களை விளையாடி இருந்ததே, சாதனையாக இருந்த நிலையில், அதை முறியடிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். அதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டேன்.
தண்ணீருக்குள் நீண்டநேரம் மூச்சுவிடாமல் இருப்பதற்காக பிரணாயாமம் யோகா முறை எனக்கு மிகுந்த பயனளித்ததாக அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil