டாஸ்மாக் கடையில் ரூ.2000 நோட்டுகளை வாங்கக்கூடாது என்று எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ. 2000 நோட்டுகளை வரும் செப்டம்பர் 30 தேதி வரை வங்கிகள், ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களில் ஒப்படைத்து வேறு தாள்களை பெற்றுக்கொள்ளலாம். அல்லது வங்கிக் கண்க்கில் இந்த பணத்தின் கணக்கை சேர்த்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் 2016ம் ஆண்டு ரூ. 500 மற்றும் ரூ.1000 திரும்பபெறப்பட்டது, இது இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பொருளாதார வள்ளுநர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க ரூ. 2000 பெற்றுக்கொள்ள கூடாது என்ற தகவல் பரவியாதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். “ டாஸ்மாக்கில் 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்கக்கூடாது என எந்த சுற்றரிக்கையும் அனுப்பப்படவில்லை. ரூ. 2000 நோட்டுக்களை டாஸ்மாக்கில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“