உக்ரைனின் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போரை நிறுத்துவதாக ரஷ்யா நேற்று அறிவித்தது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களை சந்தித்த முதல்வர்
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்களை மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார்.
நெல்லை பாளையங்கோட்டையில் மாணவ-மாணவிகளை அவர் சந்தித்து பேசினார். அப்போது மாணவர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
பெற்றோர் நிதி உதவி
உக்ரைனில் உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவி செய்ய அமைச்சர் ஒசூரைச் சேர்ந்த மாணவரின் பெற்றோர் ரூ.25,000 நிதி வழங்கினர்.
உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இரு தலைவர்களிடமும் இந்திய மாணவர்களை மீட்க உதவுமாறு அவர் வலியுறுத்தினார்.
'20,000 இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்'
உக்ரைனில் இருந்து 20,000 இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு இந்தியா உதவியது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி தெரிவித்தார்.
தங்கம் விலை அதிகரிப்பு
உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்தது.
சென்னையில் பவுன் தங்கம் ரூ.40,000 ஐ எட்டியது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்க பரிசீலித்து வருவதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. அதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 22:47 (IST) 08 Mar 2022ரஷ்யாவுடன் எண்ணெய் இறக்குமதியை நிறுத்த இங்கிலாந்து முடிவு
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்து அரசு, ரஷ்ய எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்களின் இறக்குமதியை 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறுத்துவதாகக் கூறியுள்ளது., இது சந்தை மற்றும் வணிகங்களுக்கு இறக்குமதிக்கு மாற்றுகளைக் கண்டறிய போதுமான நேரத்தைக் கொடுக்கும், என்றும், "இந்த காலகட்டத்தை மாற்றுப் பொருட்களைக் கண்டுபிடிப்பதில் அவற்றைப் பயன்படுத்துவதற்கு உதவுவதற்காக எண்ணெய் மீதான புதிய பணிக்குழு மூலம் நிறுவனங்களுடன் அரசாங்கம் இணைந்து செயல்படும்" என்று இங்கிலாந்து வணிகம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குவாசி குவார்டெங் கூறியுள்ளார்
- 19:38 (IST) 08 Mar 2022ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை அமெரிகக நிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்
உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் அதிபர் வோலோட்மிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இறக்குமதியை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எரிசக்தி ஏற்றுமதிகள் ரஷ்யாவின் நிதித் துறையில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ரஷ்யாவிற்கு பணப் பாய்ச்சலின் நிலையான வருவாயை வைத்திருக்கிறது. இந்த நடவடிக்கை விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
- 19:03 (IST) 08 Mar 2022இந்திய மாணவர்கள் அனைவரும் சுமி நகரில் இருந்து வெளியேறினார்கள் - வெளியுறவு அமைச்சகம் தகவல்
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், “சுமி நகரில் இருந்து இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வெளியேற்ற முடிந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
Happy to inform that we have been able to move out all Indian students from Sumy.
— Arindam Bagchi (@MEAIndia) March 8, 2022
They are currently en route to Poltava, from where they will board trains to western Ukraine.
Flights under operationganga are being prepared to bring them home. pic.twitter.com/s60dyYt9U6 - 18:08 (IST) 08 Mar 2022ரஷ்யா உடன் வணிக செயல்பாடுகளை நிறுத்த உலக வணிக நிறுவனங்களுக்கு உக்ரைன் வேண்டுகோள்
உக்ரைன் அறநெறி மற்றும் சமூகப் பொறுப்புள்ள உலகளாவிய வணிக நிறுவனஞக்ள் ரஷ்யாவுடன் உடனான செயல்பாடுகளை நிறுத்த அல்லது தற்காலிகமாக நிறுத்துமாறு கோரியுள்ளது. இது குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரி குலேபா ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- 17:24 (IST) 08 Mar 2022உக்ரைனின் சுமி நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேற்றப்பட்டதாக தகவல்
உக்ரைனில் உள்ள சுமி நகரில் இருந்து 12 பேருந்துகள் அடங்கிய கான்வாய் மூலம் இன்று அதிகாலை புறப்பட்டது. அங்கிருந்த இந்தியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- 17:14 (IST) 08 Mar 2022உக்ரைன் சுமி நகரில் நடத்தப்பட்ட ரஷ்ய விமானத் தாக்குதலில் 21 பேர் பலி
உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியில் குடியிருப்பு தெருவில் திங்கள்கிழமை பிற்பகல், ரஷ்ய விமான தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட குறைந்தது 21 பேர் பலியானதாக அப்பகுதி வழக்கறிஞர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் தேடுதல் வேட்டையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை உடல்கள் மீட்கப்பட்டன என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- 17:13 (IST) 08 Mar 2022உக்ரைன் சுமி நகரில் நடத்தப்பட்ட ரஷ்ய விமானத் தாக்குதலில் 21 பேர் பலி
உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியில் குடியிருப்பு தெருவில் திங்கள்கிழமை பிற்பகல், ரஷ்ய விமான தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட குறைந்தது 21 பேர் பலியானதாக அப்பகுதி வழக்கறிஞர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் தேடுதல் வேட்டையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை உடல்கள் மீட்கப்பட்டன என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- 17:01 (IST) 08 Mar 2022ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக ஷெல் அறிவிப்பு
எரிசக்தி நிறுவனமான ஷெல் ரஷ்ய எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் ரஷ்யாவில் மூடப்பட்ட சேவை நிலையங்களை வாங்குவதை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- 16:29 (IST) 08 Mar 2022உக்ரைனில் இருந்து 2 மில்லியன் மக்கள் வெளியேற்றம் - ஐ.நா
உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை செவ்வாயன்று 2 மில்லியனை தாண்டியதாகவும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் அரங்கேறிய மிக விரைவான வெளியேற்றம் இதுவாகும் என ஐநா தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பத்திரமாக வெளியேற பல இடங்களில் போர் நிறுத்தத்தை ரஷ்ய அறிவித்துள்ளது. இதன் காரணமாக வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- 16:18 (IST) 08 Mar 2022உக்ரைன் தலைநகரில் கிவ்வில் தெரு சண்டை
உக்ரைன் படைவீரர்களும், தப்பியோடிய குடியிருப்பாளர்களும் திங்களன்று கிவ்வின் வடமேற்கு பகுதியில் கை சண்டையில் ஈடுபட்டனர். விரைவில் இந்த சண்டை தலைநகர் முழுவதும் பரவலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- 15:29 (IST) 08 Mar 2022உக்ரைனுக்கு ஜெட் விமானங்களை அனுப்ப முடிவு செய்தால் போலந்துக்கு ஆதரவளிப்போம் - இங்கிலாந்து அறிவிப்பு
இங்கிலாந்து பாதுகாப்பு துறை அமைச்சர் பென் வாலஸ் கூறுகையில், உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க முடிவு செய்தால், போலந்துக்கு ஆதரவாக பிரிட்டன் இருக்கும். ஆனால் அவ்வாறு செய்வது போலந்துக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்தார்.
- 15:01 (IST) 08 Mar 2022பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் உரையாற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி!
உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கி செவ்வாயன்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் வீடியோ இணைப்பு மூலம் பிரிட்டிஷ் சட்டமியற்றுபவர்களுடன் உரையாடுகிறார். மற்றொரு நாட்டின் அதிபர் பிரதான வெஸ்ட்மின்ஸ்டர் அறையில் உரையாற்றுவது இதுவே முதல் முறை.
ரஷ்யா தனது நாட்டை ஆக்கிரமித்ததில் இருந்து பல சந்தர்ப்பங்களில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பேசிய ஜெலென்ஸ்கி, கடந்த வாரத்தில் மேற்கத்திய தலைவர்களிடம் பல ஆவேசமான உரைகளை ஆற்றி, பொருட்கள் மற்றும் இராணுவ ஆதரவைக் கேட்டார்.
இரவு 10.30 IST மணிக்கு முறையான பாராளுமன்ற அலுவல் இடைநிறுத்தப்படும் போது அவர் அறையில் உரையாற்றுவார்.
- 14:39 (IST) 08 Mar 2022மனிதாபிமான வழித்தடம்: இதுவரை 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்!
உக்ரைன் செவ்வாய்க்கிழமை வடகிழக்கு நகரமான சுமி மற்றும் தலைநகர் கீவ் அருகே உள்ள இர்பின் நகரத்திலிருந்து பொதுமக்களை வெளியேற்றத் தொடங்கியது என்று உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Russia says it plans to open humanitarian corridors in Ukraine - with most of the routes leading into Russia or its ally Belarus.
— AFP News Agency (@AFP) March 8, 2022
Kyiv insists the move is a publicity stunt as the invading forces are maintaining a devastating shelling campaignhttps://t.co/nowD9ymlNL pic.twitter.com/soULjqFj4y - 14:31 (IST) 08 Mar 2022உக்ரைன் 2வது அகதிகளின் அலை மிகவும் பாதிக்கப்படும்.. UNHCR தலைவர்!
உக்ரைனில் இருந்து வந்த அகதிகளின் முதல் அலைக்குப் பிறகு, மேலும் பாதிக்கப்படக்கூடிய அகதிகளைக் கொண்ட இரண்டாவது அலை உருவாக வாய்ப்புள்ளது என்று ஐ.நா அகதிகள் அமைப்பின் தலைவர் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
"போர் தொடர்ந்தால், வளங்கள் மற்றும் தொடர்புகள் இல்லாத மக்களை நாங்கள் பார்க்கத் தொடங்குவோம்" என்று UNHCR தலைவர் பிலிப்போ கிராண்டி ஒரு செய்தி மாநாட்டில் கூறினார். "இது முன்னோக்கி செல்லும் ஐரோப்பிய நாடுகளுக்கு நிர்வகிக்க மிகவும் சிக்கலான சூழ்நிலையாக இருக்கும் என்று அவர் கூறினார். (ராய்ட்டர்ஸ்)
- 14:27 (IST) 08 Mar 2022சுமியில் இருந்து பொல்டாவா வரையிலான பசுமை வழித்தடம்!
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மனிதாபிமான வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
Green corridor from Sumy to Poltava. Keep an eye. More attention, less chances it will be shelled. pic.twitter.com/6zSyj5cdD5
— Nataliya Gumenyuk (@ngumenyuk) March 8, 2022 - 14:25 (IST) 08 Mar 2022சுமியிலிருந்து பொதுமக்கள் வெளியேற 'மனிதாபிமான வழித்தடம்'
உக்ரைனின் சுமியிலிருந்து பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் 'மனிதாபிமான வழித்தடம்' அமைக்கப்பட்டுள்ளது.
"மனிதாபிமான வழித்தடத்தை" அமைப்பது தொடர்பான ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தின் கீழ், முற்றுகையிடப்பட்ட உக்ரேனிய நகரமான சுமியிலிருந்து செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் வெளியேறத் தொடங்குவார்கள் என்று உக்ரேனிய துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறினார்.
முதல் கான்வாய் சுமி நகரில் இருந்து காலை 10 மணிக்கு (பிற்பகல் 1.30 மணி) தொடங்கும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கான்வாய் உள்ளூர் மக்களால் தனிப்பட்ட வாகனங்களில் பின்தொடர்வார்கள்" என்று அவர் ஒரு தொலைக்காட்சி அறிக்கையில் கூறினார்.
- 14:21 (IST) 08 Mar 2022சுமி நகரில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல்!
உக்ரைனின் சுமி நகரில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 13:57 (IST) 08 Mar 2022கார்கிவ் நகரில் இருந்து 6 லட்சம் பேர் வெளியேறினர்!
ரஷ்ய படைகளின் தீவிர தாக்குதலுக்கு ஆளாகியுள்ள கார்கிவ் நகரில் இருந்து இதுவரை 6 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர்!
- 13:40 (IST) 08 Mar 2022நான் ஒளிந்துகொள்ளவில்லை, யாருக்கும் பயப்படவில்லை.. ஜெலன்ஸ்கி!
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, திங்களன்று கீவ் நகரின் பாங்கோவா தெருவில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில்’ தனது இருப்பிடத்தை இன்ஸ்டாகிராம் லொகேஷன் மூலமாக தெரிவித்து நான் ஒளிந்துகொள்ளவில்லை, யாருக்கும் பயப்படவில்லை என்று கூறியுள்ளார்.
- 13:11 (IST) 08 Mar 2022சுமி பகுதியில் சுமார் 700 இந்திய மாணவர்கள்.. உக்ரைன், ரஷ்யா உதவவில்லை!
உக்ரைன் நாட்டில், போர் தீவிரமாக நடந்து வரும் சுமி பகுதியில் சுமார் 700 இந்திய மாணவர்கள் சிக்கியிருப்பதாகவும், அவர்களை பாதுகாப்பாக மீட்க ஏற்பாடு செய்து தருமாறு உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் பல முறை வேண்டுகோள் விடுத்தும் அது ஏற்கப்படவில்லை என இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.
- 12:16 (IST) 08 Mar 2022கிழக்கு மற்றும் மத்திய உக்ரைனில் தொடர் தாக்குதல் நடத்தும் ரஷ்யா
கிழக்கு மற்றும் மத்திய உக்ரைனில் ஆயுதமேந்திய ராணுவ அமைப்புகள் மற்றும் முகாம்களை வான்வெளி தாக்குதல் மூலம் அழித்தது ரஷ்யா என்று உக்ரைன் கூறியுள்ளது. தலைநகர் கீவ்விற்கு அருகே இருக்கும் புறநகர் பகுதிகளான சுமி மற்றும் ஒக்தைர்கா ஆகிய பகுதிகளில் விடிய விடிய ரஷ்யா நடத்திய தாக்குதலில் மின் உற்பத்தி நிலையம், குடியிருப்பு பகுதிகள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- 11:54 (IST) 08 Mar 2022ரஷ்யா வழியாக செல்லும் இரண்டு விமானங்களை ரத்து செய்தது யுனைட்டட் ஏர்லைன்ஸ்
ரஷ்யா வழியாக செல்லும் இரண்டு விமானங்களை ரத்து செய்தது யுனைட்டட் ஏர்லைன்ஸ். சிக்காகோவை தளமாக கொண்ட இந்த விமான நிறுவனம் சான்பிரான்ஸிஸ்கோ மற்றும் டெல்லி, நீவார்க், நியூ ஜெர்ஸி மற்றும் மும்பைக்கு இடையேயான விமான சேவைகளை நிறுத்தியது.
- 11:35 (IST) 08 Mar 2022உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - ரஷ்யா
சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் கூறியது போன்று மும்முனை ஆலோசனை கூட்டத்திற்கு தயார் என்றும் ஆனால் இந்த பேச்சுவார்த்தை செர்னோபில்லில் நடைபெறாது என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது.
- 10:50 (IST) 08 Mar 2022கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும்: ரஷ்யா எச்சரிக்கை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 300 டாலரை எட்டும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 10:41 (IST) 08 Mar 2022உக்ரைன் ராணுவத்தில் தமிழக இளைஞர்: தொடங்கியது விசாரணை
உக்ரைன் துணை ராணுவப் படையில் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் இணைந்திருப்பது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளது.
- 10:39 (IST) 08 Mar 2022ரஷ்யா மீது உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
உக்ரைன் மக்கள் பாதுகாப்பு வெளியேறி வழித்தடங்களை உருவாக்கித் தருவதாக வெற்று பிரசாரம் செய்கிறது ரஷ்யா என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.
- 09:59 (IST) 08 Mar 2022எண்ணெய் இறக்குமதி: அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை தடை செய்வது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
- 09:34 (IST) 08 Mar 2022ரஷ்யாவில் வணிக நடவடிக்கைகளை நிறுத்தியது ஐ.பி.எம்.
உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவில் வணிக நடவடிக்கைகளை நிறுத்துவதாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் அறிவித்துள்ளது.
- 09:23 (IST) 08 Mar 2022உக்ரைன் ராணுவத்தில் இந்திய மாணவர்!
உயரம் குறைவாக இருந்ததால் இந்திய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்ட கோவையைச் சேர்ந்த மாணவர் சாய் நிகேஷ், உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். இவர் உக்ரைனுக்கு 2018 இல் படிக்கச் சென்றார்.
- 09:14 (IST) 08 Mar 20223-ஆவது கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
உக்ரைன்-ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- 09:04 (IST) 08 Mar 2022ரஷ்யா மீது ஜப்பான் புதிய பொருளாதாரத் தடைகள்
ரஷ்யாவிலிருந்து சுத்திகரிப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்ய ஜப்பான் தடை விதித்துள்ளது. மேலும், மேலும் 32 ரஷ்ய அதிகாரிகள் மற்றும் பெலாரஸ் அதிகாரிகளின் சொத்துகளை ஜப்பான் அரசு முடக்கியுள்ளது.
- 09:04 (IST) 08 Mar 2022ரஷ்யா மீது ஜப்பான் புதிய பொருளாதாரத் தடைகள்
ரஷ்யாவிலிருந்து சுத்திகரிப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்ய ஜப்பான் தடை விதித்துள்ளது. மேலும், மேலும் 32 ரஷ்ய அதிகாரிகள் மற்றும் பெலாரஸ் அதிகாரிகளின் சொத்துகளை ஜப்பான் அரசு முடக்கியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.