Ukraine News: உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 182 இந்தியர்களுடன், ருமேனியாவில் இருந்து புறப்பட்ட 7வது சிறப்பு விமானம் இன்று காலை மும்பை வந்தடைந்தது. அதேபோல், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 216 இந்தியர்களுடன்’ ஆபரேஷன் கங்காவின் 8வது விமானம், ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது. மேலும், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9வது சிறப்பு விமானம், ருமேனியாவின் புக்கரெஸ்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஏற்கனவே 6 விமானங்களில் 1,400 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.
உக்ரைனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய இந்தியா முடிவு!
மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய முடிவு செய்துள்ளதாக’ ஐ.நா.வின் 11வது அவசர சிறப்பு கூட்டத்தில் இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி அறிவித்துள்ளார்.
உலக ரக்பி போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க தடை!
உலக ரக்பி போட்டிகளில் மறு அறிவிப்பு வரும்வரை ரஷ்யா மற்றும் பெலராஸ் பங்கேற்க தடை விதித்து உலக ரக்பி நிர்வாகக் குழு உத்தரவிட்டுள்ளது.
Ukraine News Live Updates
ரஷ்ய மக்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கு தடை!
ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், ரஷ்ய மக்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உக்ரைனுக்கு வெளிநாடுகள் வழங்கும் ஆயுதங்கள், ரஷ்ய நாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டால் அதற்கு அந்த நாடுகளே பொறுப்பு என ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு கனடா அரசு தடை!
ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள், ரஷ்ய மத்திய வங்கி மீது தடை விதிப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
உக்ரைனின், கார்கிவ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், கியேவ் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு எச்சரித்துள்ளது. செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சகம், “உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) மற்றும் 72 வது தகவல் மற்றும் உளவியல் நடவடிக்கைகளுக்கான மையம் (PSO)” ஆகியவற்றிற்கு எதிராக “உயர் துல்லியமான தாக்குதல்களை” நடத்த ரஷ்யா தயாராகி வருவதாகக் கூறியது. “ரஷ்யாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல்களில் உக்ரேனிய தேசியவாதிகளால் ஈடுபட்டுள்ள உக்ரேனிய குடிமக்களையும், ரிலே நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் கிய்வ் குடியிருப்பாளர்களையும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் 4வது முறையாக உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இந்திய மாணவர் நவீன் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த நிலையில் மீண்டும் ஆலோசனை நடைபெறுகிறது
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து ரஷ்யாவை நீக்க பிரிட்டன் அரசு தயாராக உள்ளது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளது
ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 13 குழந்தைகள் உட்பட குறைந்தது 136 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 400 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் இந்திய மாணவர் உயிரிழந்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கூறுகையில், “உக்ரைனில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்த சோகச் செய்தி கிடைத்தது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நான் மீண்டும் வலியுறுத்துகிறேன், பாதுகாப்பான வெளியேற்றத்திற்கு இந்திய அரசுக்கு ஒரு திட்டம் தேவை. ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது.” என்று கூறினார்.
Received the tragic news of an Indian student Naveen losing his life in Ukraine.My heartfelt condolences to his family and friends. I reiterate, GOI needs a strategic plan for safe evacuation. Every minute is precious.
— Rahul Gandhi (@RahulGandhi) March 1, 2022
கார்கிவ் மீது ராக்கெட்டை ஏவியபோது ரஷ்யா ஒரு “பயங்கரவாத நாடாக” மாறியது என்று தி கிவ் இண்டிபென்டன்ட் தெரிவித்துள்ளது. “கார்கிவின் மத்திய சதுக்கத்தில் ராக்கெட்டை ஏவுவது ஒரு மறைக்கப்படாத பயங்கரவாதம். அதனால் இப்போது ரஷ்யா பயங்கரவாத நாடாக மாறியது. இதை யாரும் மன்னிக்க மாட்டார்கள். யாரும் மறக்க மாட்டார்கள்,என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, கூறியுள்ளார்.
உக்ரைன் போர்ரில், கார்கிவ் நகரில் நடைபெற்ற தாக்குதலில், இந்திய மாணவர் மரணமடைந்தார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “உக்ரைனில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்த சோகச் செய்தி கிடைத்தது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நான் மீண்டும் வலியுறுத்துகிறேன், பாதுகாப்பான வெளியேற்றத்திற்கு கூர்மையான திட்டங்கள் தேவை ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது. என்று கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், இன்று காலை கார்கிவ் நகரில் நடைபெற்ற ஷெல் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக எம்.இ.ஏ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “இன்று காலை கார்கிவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் ஷெல் தாக்குதலில் உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று பதிவிட்டுள்ளார். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
With profound sorrow we confirm that an Indian student lost his life in shelling in Kharkiv this morning. The Ministry is in touch with his family.We convey our deepest condolences to the family.
— Arindam Bagchi (@MEAIndia) March 1, 2022
ஐரோப்பாவில் RT, Sputnik ஆகிய யூடியூப் சேனல்களை ஒளிபரப்ப யூடியூப் நிறுவனம் தடை விதித்துள்ளது.
உக்ரைனின் கார்கிவ் நகரில் ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ராணுவ குற்றம் என உக்ரைன் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைன் மரியபோல் நகரில் ரஷ்யா-உக்ரைன் படைகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இரு நாட்டு படைகளும் சண்டையிட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து திரும்பிய பொறியியல் மாணவர்களுக்கு தமிழக கல்லூரிகளில் படிப்பைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
வீடுகள் அல்லது செண்டர்களில் டியூசன் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டியூஷன் எடுப்பது ஆசிரியர் சமூகத்தில் புற்றுநோய் போல் பரவி பணம் சம்பாதிக்கும் பேராசையை அதிகரிப்பதாக நீதிபதிகள் கருத்து
உக்ரைனில் இன்னும் 2,223 தமிழக மாணவர்கள் சிக்கித் தவிப்பதாக மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கார்கிவ் மாநிலத்தில் 728 மாணவர்களும், தலைநகர் கீவில் 352 மாணவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்கிவ் பிராந்தியத் தலைவர் Oleg Synegubov கூறுகையில், உக்ரைனின் 2ஆவது மிகப்பெரிய நகரமான கார்கிவ்வில் உள்ள நிர்வாக கட்டிடங்கள், குடியிருப்புகள் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியது. GRAD மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை ரஷ்யா ஏவியது. இத்தகைய தாக்குதல்கள் உக்ரேனிய மக்களின் இனப்படுகொலை, பொதுமக்களுக்கு எதிரான போர்க்குற்றமாகும் என்றார்.
மக்கள் அதிகம் வாழும் நகரங்களில், தாக்குதலை தீவிரப்படுத்தவும், ரஷ்ய வீரர்களின் உயிர்ச்சேதத்தை தவிர்க்கவும் இரவு நேர தாக்குதலை நடத்திட ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக இங்கிலாந்து பாதுகாப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது.
வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்க தொடங்கியதால், கார்கிவ் நகரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நகரின் மையத்தில் உள்ள Independence Square பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக உக்ரைனை தளமாகக் கொண்ட செய்தி இணையதளமான தி கிய்வ் இன்டிபென்டன்ட் தெரிவித்துள்ளது.
⚡️ Russian forces have struck Independence Square in central Kharkiv with a powerful explosion.According to a video of the event, the blast detonated right in front of the headquarters of the Kharkiv Oblast government.Video: Ukraine NOW/Telegram pic.twitter.com/poZjYcjRjD
— The Kyiv Independent (@KyivIndependent) March 1, 2022
உக்ரைன் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் வெளிநாட்டுப் பயணம் ஒத்திவைப்பு
ஆப்ரேஷன் கங்கா திட்டத்தில் இன்று முதல் இந்திய விமானப்படையின் சி17 ரக விமானங்கள் இணைய உள்ளதாகவும், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க இந்த விமானம் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் செயல்படும் நேரத்தை நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு. சென்னை, புறநகர் பகுதிகளில் காலை 8:30 முதல் 12:30 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் 7 மணி வரையிலும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. ரயில்கள் அல்லது வேறு வழிகளில் தலைநகரை விட்டு வெளியேற இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
ஒக்திர்கா நகரில் உள்ள ராணுவ தளத்தை ரஷ்ய பீரங்கிகள் தாக்கியதில் 70க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாகூருக்கு சுற்றுலா வந்த பெங்களூரு பிராட்வே பகுதியைச் சேர்ந்த ஷபீர் மற்றும் அவரது மகன் முகமது அயான் இருவரும் கடலில் குளிக்கும் போது அலையில் சிக்கி உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை
இன்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடும் முதல்வர், பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்
இந்தியாவின் இளைய சக்தியை பார்த்து தான் உலக நாடுகள் பயப்படுகின்றன. தனித்த திறமையை மாணவர்கள் கண்டறிந்து செயல்பட வேண்டும். பட்டப்படிப்பை தாண்டி தனித்திறமை இருந்தால் தான் வெல்ல முடியும். படிப்பு என்பது திறமை சார்ந்ததாக மாற வேண்டும். நான் முதல்வன்' திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சென்னை, கலைவாணர் அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்களுக்கான நான் முதல்வன்' எனும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அனைத்து இளைஞர்கள் கல்வி, ஆராய்ச்சி, திறமையில் சிறந்தவர்களாக மாற்றவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நடிகர் ரஜினி வாழ்த்து!
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
— Rajinikanth (@rajinikanth) March 1, 2022
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்த நாளையொட்டி மநீம கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து!
மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் @mkstalin பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க. pic.twitter.com/JGt9KWwdrt
— Kamal Haasan (@ikamalhaasan) March 1, 2022
தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலினுக்கு தொலைப்பேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தங்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைப்பேன் பிரதமரிடம் முதல்வர் உறுதியளித்தார்.
முதல்வர் ஸ்டாலின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து!
நமக்காகவே நாளும் உழைக்கும் – நமது முதலமைச்சர் தளபதி வாழிய வாழியவே!‘ சரித்திர நாயகரான’ நமது முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இன்று (1.3.2022) 69 ஆம் ஆண்டு பிறந்த நாள்! pic.twitter.com/ECJKCQwunf
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) March 1, 2022
ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம், உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களையும் தாய்நாட்டிற்கு அழைத்து வர 24 மணி நேரமும் மத்திய அரசு உழைத்து வருகிறது. 4 மூத்த அமைச்சர்கள், சிறப்புத் தூதர்கள் நியமிக்கப்பட்டு வெளியேற்றத்தை மத்திய அரசு எளிதாக்கியுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மோடி அரசுக்கு நன்றி கூறியுள்ளார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவரும், தனது அண்ணனுமான ஸ்டாலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு கனிமொழி எம்.பி. ட்வீட்டரில் சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்து!
பெரியார்- அண்ணா – கலைஞர்- உள்ளிட்ட முன்னோடிகள் விட்டுச் சென்ற சமூக நீதிப் பாதையில், கழகத்தையும் தமிழகத்தையும் வழிநடத்திச்செல்லும் தளபதி – அண்ணன் @mkstalin அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். pic.twitter.com/JM7lWpVgof
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 1, 2022
முதல்வர் ஸ்டாலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு, கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்டர் பிறந்தநாள் வாழ்த்து!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினேன். வரலாற்றுச் சிறப்புமிக்க கேரள-தமிழக உறவினை மேலும் வலுப்படுத்தவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்திருக்கும் உயர்ந்த கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து போராடவும் வாழ்த்துகிறேன்.@mkstalin pic.twitter.com/6VaY3uxMLU
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) March 1, 2022
உக்ரைன் ராணுவத்துடன் இணைந்து, ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட விரும்பும் வெளிநாட்டவர்கள் உக்ரைன் வரலாம் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர்களுக்கு எளிதில் விசா அனுமதி கிடைக்கும்படி அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் தொடர்ந்து 117-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்துதல்: https://t.co/dOFBCKX2cJ
— M.K.Stalin (@mkstalin) March 1, 2022
அதேபோல் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல் https://t.co/KXIPCTqU4e
— M.K.Stalin (@mkstalin) March 1, 2022
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை, அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிடுகிறார்.
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 105 உயர்ந்து ரூ. 2145.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் நள்ளிரவில் திருடு போனது. இதுகுறித்து’ சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.