ரஷ்யா போர் தொடுத்துள்ள உக்ரைனில் இதுவரை 360 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது.
மாணவர்களை மீட்க தமிழக அரசு நிதியுதவி
உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம்
உக்ரைனில் மனிதாபிமான அடிப்படையில் 2 நகங்களில் (மரியுபோல், வோல்னோவாகா) மட்டும் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.
மூன்றாவது அணு மின் நிலையத்தை நோக்கி முன்னேறும் ரஷ்யா: உக்ரைன் அதிபர்
ரஷ்யா மூன்றாவது அணு மின் நிலையத்தை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கிறது என்று உக்ரைனஅ அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். முன்னதாக, உக்ரைனின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜாவை ரஷ்யா கைப்பற்றியது.
அணுசக்தி தளங்களை பாதுக்காக்க நடவடிக்கை: பிரான்ஸ் உக்ரைன் அணுசக்தி தளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக பிரான் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.
உலக அமைதி மீதான தாக்குதல்: அமெரிக்க அதிபர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உலக அமைதி மீதான தாக்குதல் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆவேசத்துடன் தெரிவித்தார்.
3-ஆவது கட்ட பேச்சுவார்த்தை எப்போது?
உக்ரைன்-ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று ரஷ்ய வெளியுறவுத் துறை தெரிவித்தது.
700 இந்திய மாணவர்கள் சிக்கித் தவிப்பு: மத்திய அரசு
உக்ரைனில் இருந்து 3,000 இந்திய மாணவர்கள் தாய்நாடு வந்தனர். இன்று 2,200 பேர் வரவுள்ளனர்.
இதனிடையே, உக்ரைன் போர் பகுதியில் 700 இந்திய மாணவர்கள் தவித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 21:53 (IST) 06 Mar 2022உக்ரைனில் இருந்து டெல்லி திரும்பிய தமிழக மாணவர்களில் தமிழக எம்பிக்கள் குழு கலந்துரையாடல்
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு டெல்லி திரும்பிய தமிழக மாணவர்கள் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில, அவர்களுடன் தமிழக எம்பிக்கள் உரையாடியுள்ளனர். உக்ரைனில் இருந்து மீட்கப்படும் தமிழக மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட திருச்சி சிவா உள்ளிட்ட எம்பிக்கள் அடங்கிய குழு கலந்துறையாடி உக்ரைனில் அவர்கள் சந்தித்த பிரச்சினைகள், இந்திய தூதரகத்தின் சார்பில் அவர்களுக்கு கிடைத்த உதவிகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்தனர்.
- 20:52 (IST) 06 Mar 2022உக்ரைனில் போர்க்குற்றங்கள் நடந்துள்ளனவா என்பது குறித்து விசாரிக்க அமெரிக்க திட்டம்
உக்ரைனில் தாக்குதலை தொடர்ந்து வரும் ரஷ்யப் படைகள் பொதுமக்கள் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றிய 'மிகவும் நம்பகமான அறிக்கைகளை' அமெரிக்கா கண்டுள்ளது என்றும், போர்க்குற்றங்கள் நடந்துள்ளனவா என்பதை சம்பந்தப்பட்ட அமைப்புகள் விசாரிக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்த வாஷிங்டன் இந்த அறிக்கைகளை ஆவணப்படுத்துவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.
- 20:50 (IST) 06 Mar 2022வின்னிட்சியாவின் சிவிலியன் விமான நிலையம் அழிந்துவிட்டதாக ரஷ்யா அதிபர் தகவல்
ரஷ்ய ராக்கெட்டுகள் வின்னிட்சியாவின் சிவிலியன் விமான நிலையத்தை முற்றிலுமாக அழித்துவிட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் அவசர சேவைகள் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 19:43 (IST) 06 Mar 2022கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் நிறுத்தம் - புதின்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், மக்கள் வெளியேறுவதற்காக 2 நகரங்களில் தங்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இராணுவ நடவடிக்கையை நிறுத்துவேன் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறிய மக்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனை எட்டியுள்ளது
- 19:37 (IST) 06 Mar 2022உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ஆன்லைன் படிவத்தை நிரப்ப இந்திய தூதரகம் வேண்டுகோள்
ரஷ்யாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்டு தற்போது உக்ரைனில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் அவசர அடிப்படையில் ஆன்லைன் படிவத்தை நிரப்புமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது இன்னும் உக்ரைனில் இருக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் கூகுள் படிவத்தில் உள்ள விவரங்களை அவசர அடிப்படையில் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பாதுகாப்பாக தைரியமாக இருங்கள்” என்று என்று ட்விட்டர் பதிவில் இந்திய தூதரகம் பதிவிட்டுள்ளது.
All Indian Nationals who are in KHARKIV excluding PISOCHYN, please fill up details contained in the form on an urgent basis: https://t.co/hm5ayU5UgC
— India in Ukraine (@IndiainUkraine) March 3, 2022 - 19:19 (IST) 06 Mar 2022உக்ரைனி்ல் போர் நிறுத்தம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் ரஷ்ய அதிபர் புட்டினுடன் பேச்சுவார்த்தை
உக்ரைன் போர் குறித்து எர்டோகன் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசி, 'அவசர பொது போர்நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனில் நடத்திய தாக்குதல் குறித்து பேசிய எர்டோகன் உக்ரைனில் ஓடும் "ரத்தம் மற்றும் கண்ணீரின் ஆறுகள்" என்று அவர் கூறியதைக் கண்டித்த போப் பிரான்சிஸ், அகதிகளுக்கான மனிதாபிமான எண்ணங்களை உருவாக்குமாறு கூறியுளளார்.
- 19:19 (IST) 06 Mar 2022உக்ரைனுக்கு எதிரான போரில் 11,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தகவல்
பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியதில் இருந்து இதுவரை 11,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரேனிய ஆயுதப்படைகளின் பொது ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆனால் இதில் உக்ரேனிய வீரர்கள் பலி எண்ணிக்கை குறித்து தெரிவிக்கவில்லை.
- 19:15 (IST) 06 Mar 2022உக்ரைனி்ல் போர் நிறுத்தம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் ரஷ்ய அதிபர் புட்டினுடன் பேச்சுவார்த்தை
உக்ரைன் போர் குறித்து எர்டோகன் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசி, 'அவசர பொது போர்நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனில் நடத்திய தாக்குதல் குறித்து பேசிய எர்டோகன் உக்ரைனில் ஓடும் "ரத்தம் மற்றும் கண்ணீரின் ஆறுகள்" என்று அவர் கூறியதைக் கண்டித்த போப் பிரான்சிஸ், அகதிகளுக்கான மனிதாபிமான எண்ணங்களை உருவாக்குமாறு கூறயுளளார்.
- 18:40 (IST) 06 Mar 2022உக்ரைனி்ல் போர் நிறுத்தம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் ரஷ்ய அதிபர் புட்டினுடன் பேச்சுவார்த்தை
உக்ரைன் போர் குறித்து எர்டோகன் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசி, 'அவசர பொது போர்நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனில் நடத்திய தாக்குதல் குறித்து பேசிய எர்டோகன் உக்ரைனில் ஓடும் "ரத்தம் மற்றும் கண்ணீரின் ஆறுகள்" என்று அவர் கூறியதைக் கண்டித்த போப் பிரான்சிஸ், அகதிகளுக்கான மனிதாபிமான எண்ணங்களை உருவாக்குமாறு கூறியுளளார்.
- 18:35 (IST) 06 Mar 2022உக்ரைனுக்கு எதிரான போரில் 11,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தகவல்
பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியதில் இருந்து இதுவரை 11,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரேனிய ஆயுதப்படைகளின் பொது ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆனால் இதில் உக்ரேனிய வீரர்கள் பலி எண்ணிக்கை குறித்து தெரிவிக்கவில்லை.
- 16:31 (IST) 06 Mar 202210 நாட்களில் உக்ரைனில் இருந்து 15 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர் - ஐ.நா
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கடந்த 10 நாட்களில், உக்ரைனில் இருந்து 15 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
- 15:08 (IST) 06 Mar 2022ஆபரேஷன் கங்காவின் கடைசி கட்டம் இன்று - ஹங்கேரியின் இந்திய தூதரகம் அறிவிப்பு
ஹங்கேரியில் உள்ள இந்திய தூதரகம், அந்நாட்டில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்கான ஆபரேஷன் கங்கா விமானத்தின் கடைசி கட்டத்தை இன்று இயக்கும் என்று தெரிவித்துள்ளது. “இந்திய தூதரகம் ஆபரேஷன் கங்கா விமானங்களின் கடைசி கட்டத்தை இன்று தொடங்குகிறது. தங்களுடைய விடுதியில் தங்கியிருக்கும் அனைத்து மாணவர்களும் (தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டவை தவிர) @Hungariacitycentre, Rakoczi Ut 90, Budapest ஐ காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று -ட்வீட் செய்துள்ளது.
Important Announcement: Embassy of India begins its last leg of Operation Ganga flights today. All those students staying in their OWN accommodation ( other than arranged by Embassy) are requested to reach @Hungariacitycentre , Rakoczi Ut 90, Budapest between 10 am-12 pm
— Indian Embassy in Hungary (@IndiaInHungary) March 6, 2022 - 15:04 (IST) 06 Mar 2022சுமியில் இந்தியாவின் மீட்பு நடவடிக்கை சவாலான பணி
உக்ரைனில் பத்து நாட்களாக நடந்து வந்த போருக்குப் பிறகு, வடகிழக்கு உக்ரைனில் உள்ள சுமியில் இந்தியர்களை சண்டை நடக்கும் பகுதியிலிருந்து வெளியேற்றுவது இந்தியாவின் முக்கிய உடனடி சவாலாக உள்ளது. சுமார் 700 இந்தியர்கள், பெரும்பாலும் மாணவர்கள், சுமியில் சிக்கித் தவிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிலைமையைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களை வெளியேற்றுவதும் கடினமாக உள்ளது.
- 14:57 (IST) 06 Mar 2022உக்ரைனில் இருந்து டெல்லி வந்த மேலும் 852 மாணவர்கள் தமிழ்நாடு வருகை
உக்ரைனில் இருந்து டெல்லி வந்த மேலும் 852 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டின் பேரில் தமிழ்நாடு திரும்பினர். மேலும், 159 மாணவர்களுக்கு விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 14:00 (IST) 06 Mar 2022உக்ரைனில் உள்ள சுகாதார மையங்கள் மீதான தாக்குதல் குறித்து WHO கவலை
உக்ரைனில் உள்ள சுகாதார மையங்கள் மீதான "பல" தாக்குதல்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது, இதன் விளைவாக பல இறப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டன என்று ஏஜென்சியின் தலைவர் கூறினார். கூடுதல் அறிக்கைகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன என்று டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஞாயிற்றுக்கிழமை ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். மேலும் "சுகாதார வசதிகள் அல்லது தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் மருத்துவ நடுநிலைமையை மீறுகின்றன மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாகும்," என்றும் அவர் கூறினார்.
- 13:47 (IST) 06 Mar 2022பெலாரஸ் மீது ஏற்றுமதி தடைகளை விதித்துள்ளது தென் கொரியா
"உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை திறம்பட ஆதரிப்பதற்காக" பெலாரஸுக்கு எதிராக தென் கொரியா ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று சியோலின் வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்காக உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பலவிதமான தடைகளை விதித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 13:35 (IST) 06 Mar 2022மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இதன்மூலம், பாகிஸ்தானிடம் இதுவரை தோற்றதில்லை என்ற பெருமையை தக்கவைத்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானுடன் மோதிய 11 ஆட்டங்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. 245 ரன்களை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 137 ரன்களில் ஆல்அவுட் ஆனது
- 12:52 (IST) 06 Mar 2022உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களுடன் டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் குழுவினர் சந்திப்பு
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களை தமிழக எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்தனர்
- 12:33 (IST) 06 Mar 2022உக்ரைனின் நாடாக இருக்கும் அந்தஸ்தை பறிக்கப் போவதாக புதின் மிரட்டல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சனிக்கிழமை உக்ரேனிய அரசு ஆபத்தில் இருப்பதாக எச்சரித்தார் மற்றும் ரஷ்யா மீதான மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளை "போர் அறிவிப்பதற்கு" நிகரானது என்று ஒப்பிட்டார், அதே நேரத்தில் முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலில் வாக்குறுதியளிக்கப்பட்ட போர்நிறுத்தம் பயங்கரவாதத்தின் காட்சிகளுக்கு மத்தியில் சரிந்தது.
- 12:09 (IST) 06 Mar 2022கடலூர் திமுக எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்
கட்சிக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால் கடலூர் திமுக எம்.எல்.ஏ. அய்யப்பன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்
- 11:50 (IST) 06 Mar 2022இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு
உக்ரைன் மீதான போர், உள்நாட்டு பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொது போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- 11:45 (IST) 06 Mar 2022டிவிட்டர் ஊழியர்களுக்கு சிஇஓ கடிதம்
மார்ச் 15ம் தேதியிலிருந்து அலுவலகம் வருமாறு தனது ஊழியர்களுக்கு ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் கடிதம் அனுப்பியுள்ளார்.
- 11:33 (IST) 06 Mar 2022400 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை
மொகாலி டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது., 400 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது இலங்கை.
- 11:17 (IST) 06 Mar 2022உக்ரைன் மக்கள் உருக்கமான கோரிக்கை
உயிரைக் காப்பாற்றுங்கள் என்று உக்ரைன் மக்கள் உலக நாடுகளிடம் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். உக்ரைனின் பல்வேறு நகரங்களில் இருந்து அவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெளியேறி வருகின்றனர்.
- 10:43 (IST) 06 Mar 20224 லட்சம் மக்கள் பிணைக்கைதிகளாக உள்ளனர் - மரியுபோல் மேயர் குற்றச்சாட்டு
4 லட்சம் மக்கள் பிணைக் கைதிகளாக உள்ளனர் என உக்ரைனின் மரியுபோல் மேயர் குற்றம்சாட்டினார்.
- 10:43 (IST) 06 Mar 20224 லட்சம் மக்கள் பிணைக்கைதிகளாக உள்ளனர் - மரியுபோல் மேயர் குற்றச்சாட்டு
4 லட்சம் மக்கள் பிணைக் கைதிகளாக உள்ளனர் என உக்ரைனின் மரியுபோல் மேயர் குற்றம்சாட்டினார்.
- 10:13 (IST) 06 Mar 2022ரஷ்யாவுடனான போரில் பின்வாங்க வேண்டாம்: உக்ரைன் அதிபர்
ரஷ்யாவுடனான போரில் பின்வாங்கவோ கைவிடவோ வேண்டாம் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- 09:56 (IST) 06 Mar 20225,476 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
- 09:45 (IST) 06 Mar 2022சாத்தான்குளம் வழக்கு: மார்ச் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
தந்தை ஜெயராஜ் உடல் முழுவதிலும் காயம் இருந்ததாக அரசு மருத்துவமனை செவிலியர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- 09:30 (IST) 06 Mar 2022மாணவர்களை நினைத்து பெருமை: இந்தியத் தூதர்
இந்திய மாணவர்களின் தைரியத்தை நினைத்து பெருமைப்ப
டுகிறேன் என்று உக்ரைனுக்கான இந்தியத் தூதர் தெரிவித்தார்.
- 09:23 (IST) 06 Mar 2022ரஷ்யாவில் சேவை நிறுத்தி வைப்பு: விசா, மாஸ்டர்கார்டு நிறுவனங்கள் அறிவிப்பு
அமெரிக்காவைச் சேர்ந்த விசா மற்றும் மாஸ்டர்கார்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இத்தைகய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- 09:04 (IST) 06 Mar 2022மாணவர்களை மீட்க விடாமல் உக்ரைன் தடுக்கிறது: ரஷ்யா
வெளிநாட்டு மாணவர்களை மீட்க தயாராக இருந்தும் உக்ரைன் அதனை தடுக்கிறது என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
- 08:54 (IST) 06 Mar 2022புத்தக கண்காட்சி இன்றே கடைசி
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிப்.16ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் 45வது புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
- 08:52 (IST) 06 Mar 2022போரை நிறுத்துமாறு வலியுறுத்துங்கள்: இந்தியாவுக்கு உக்ரைன் வலியுறுத்தல்
போரை நிறுத்துமாறு ரஷ்ய தூதரகத்தில் இந்தியர்கள் முறையிட வேண்டும் என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா வலியுறுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.