எஸ்பிபி உடல்நிலை: வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் உதவியுடன் கண்காணிப்பு

S. P. Balasubrahmanyam Health Status: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை முன்னேற்றம் அடைய வேண்டி கூட்டு பிரார்த்தனைக்கு இயக்குனர் பாரதிராஜா அழைப்பு விடுத்தார்.

S. P. Balasubrahmanyam death live News, spb death live
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

S. P. Balasubrahmanyam live News In tamil: உலகெங்கும் இசை ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவலைக்கிடமான நிலையிலுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SP Balasubrahmanyam health update
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை

தொடக்கத்தில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. வென்டிலேட்டர் மற்றும் எக்மோ ஆகிய உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை முன்னேற்றம் அடைய வேண்டி கூட்டு பிரார்த்தனைக்கு இயக்குனர் பாரதிராஜா அழைப்பு விடுத்தார். ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இதற்கு ஆதரவு கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. அதன் லைவ் தகவல்களை இங்கு காணலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

 

Live Blog

SPB Health, Tamil Cinema Celebrities Combined Prayer Live: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை முன்னேற்றம் அடைய வேண்டி கூட்டு பிரார்த்தனைக்கு இயக்குனர் பாரதிராஜா அழைப்பு விடுத்தார்.


18:21 (IST)20 Aug 2020

அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுதல்

மாலை 6 மணிக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் அவரவர் இல்லங்களில் இருந்தபடியே எஸ்பிபி பூரண நலம் பெற வேண்டினர்.

‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர் எப்போதும்போல் பாடி, தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

18:14 (IST)20 Aug 2020

பாரதிராஜா பிரார்த்தனை

இயக்குனர் பாரதிராஜா தனது இல்லத்தில் சரியாக 6 மணிக்கு பிரார்த்தனை நடத்தி, எஸ்பிபி நலம் பெற வேண்டினார். இதைப் போல பிரபலங்கள் பலரும் தங்கள் இல்லங்களில் வேண்டுதலை வெளிப்படுத்தினர்.

18:01 (IST)20 Aug 2020

அபிராமி ராமநாதன் கருத்து

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் கூறுகையில், ‘தியேட்டர் ஓடுறதுக்கு முக்கியக் காரணம், பாடல்கள்தான். திரையரங்குகளை வாழ வைத்துக் கொண்டிருப்பவர் எஸ்.பி.பி. அவரை இறைவன் மீண்டும் பாட்டு பாடும் அளவுக்கு மீட்டுத் தர வேண்டும்’ என்றார்.

17:56 (IST)20 Aug 2020

சரோஜா தேவி உருக்கம்

பழம் பெரும் நடிகை சரோஜா தேவி தனது வீடியோ பதிவில், ‘நான் கடவுளை வேண்டிக்கிறது ஒண்ணுதான். அவரது நலனுக்காக இந்தியாவே வேண்டுகிறது. என்னுடைய முழு ஆயுளையும் வழங்கத் தயாராக இருக்கிறேன்’ என்றார்.

17:44 (IST)20 Aug 2020

பிரார்த்தனையால் எனது தந்தை மீண்டு வருவார்- எஸ்.பி.பி.சரண்

எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும் இன்று மாலை அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்தார். எனினும் பிரார்த்தனையால் அவர் மீண்டு வருவார் என நம்பிக்கை தெரிவித்தார் அவர்.

17:30 (IST)20 Aug 2020

சத்யராஜ் வீடியோ பதிவு:

சத்யராஜ் தனது வீடியோ பதிவில், ‘உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை உங்கள் குரல் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. நீங்கள் விரைவில் பூரண நலம் பெற்று வரவேண்டும்.

வில்லனாக நடித்த நான் 100 படங்களில் ஹீரோவாகவும் நடிக்க உங்கள் குரல் முக்கிய காரணம். பொதுநலத்தோட மட்டுமல்லாமல் சுய நலத்துடனும் நீங்கள் மீண்டு வர வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டார் சத்யராஜ்.

S. P. Balasubrahmanyam live News tamil: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்காக நடைபெறும் இந்தக் கூட்டுப் பிரார்த்தனையில் திரைத்துறையினர் மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள எஸ்.பி.பி ரசிகர்களும் பங்கேற்கிறார்கள். அவரவர் இடத்தில் இருந்து விளக்கேற்றி, எஸ்.பி.பி பாடல்களைப் பாடி, அவரது உடல் நலத்திற்காக இயற்கையை வேண்டும் வகையில் இந்த நிகழ்வு நடக்கிறது.

சென்னையில் பாரதிராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் அவரவர் இல்லங்களில் இருந்தபடியே இதில் பங்கு பெறுகிறார்கள். ரசிகர்கள் பெருமளவில் இதற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: S p balasubrahmanyam live news tamil cinema combined prayer for spb

Next Story
அட்மின் மீது பழி போட்டவர் தான் எச். ராஜா : அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express