நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி,சேகர் பெண் செய்தியாளர்கள் குறித்து தரம் தாழ்ந்த கருத்தை பதிவிட்டு இருந்தார். இதற்கு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, எஸ்.வி.சேகர் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்நிலையில், எஸ்.வி.சேகர் தற்போது மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நண்பரின் பேஸ்புக் பதிவை படிக்காமல் ஷேர் செய்து விட்டேன். அது என் கருத்து அல்ல. பொதுவெளியில் தரம்தாழ்ந்து விமர்சிப்பதை நான் என்றைக்கும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனது வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். நடந்த தவறுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.