வீட்டில் வாங்கிய பால் பாக்கெட்டுகள் திருந்து போனா விசயத்தை தமிழக முதல்வர் வரை கொண்டு சென்றிருக்கிறார் மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர். மேலும், புகார் அளித்த 3 மணி நேரத்துக்குள் பால் பாக்கெட்டை மாற்றிக் கொடுத்ததற்கு நன்றியும் பதிவு செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் பொது முடக்க காலத்தில், பொது மக்களின் குறைகளை ட்விட்டர் மூலமாக மக்கள் பிரதிநிதிகள் கேட்டறிந்து வருகின்றனர். சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை கொரோனா வைரஸ் தொடர்பான கோரிக்கைகள், வேண்டுதல்கள், குறைகள், சந்தேகங்களை ட்விட்டர், பேஸ்புக் நேரடியாக பதிலளித்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ட்விட்டர் பதிவில் சில சமயங்களில் நேரடியாக பொது மக்களுக்கு நேரடியாக பதிலளித்து வருகிறார். அவரின் இந்த செயல்பாடு குறிப்பாக பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
உதாரணமாக,
தனது தாயாரை இழந்த பெரம்பலூர் தூய்மைப் பணியாளர் திரு.அய்யாதுரை அவர்கள், தாயை இழந்த சோகம் மறையும் முன்னரே, இறுதிச் சடங்கு முடிந்ததும் வந்து கொரோனா பணியில் ஈடுபட்டது நெகிழ்ச்சி அளிக்கிறது.
மக்களை காக்க வேண்டும் என்ற அவரது உயர்ந்த எண்ணத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் தலை வணங்குகிறேன். pic.twitter.com/XPtd5t0qrn
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 27, 2020
அவர்களுக்கு தேவையான உதவிகள் 20.4.2020 அன்றே கிராம நிர்வாக அலுவலர் திரு.காமராஜ் அவர்கள் மூலம் கொடுக்கப்பட்டது. https://t.co/U6vvxkcWwx pic.twitter.com/4oGO0WxUie
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 27, 2020
அவர்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பகிரவும் @rameshibn. இதை எனது கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி! https://t.co/opx7tTNW4Z
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 25, 2020
எஸ்.வி.சேகர் புகார்: மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பதிவில், "இன்று காலை வாங்கிய ஆவின் பால் 13 பாக்கெட்டுகளில் 9 பாக்கெட்டுகள் பால் குக்கரில் காச்சும் போது திரிந்து விட்டது. வீட்டில் 90 வயது தாயார் 7 வயது 2 வயது குழந்தைகள் உள்ளது. நான் என்ன செய்வது' என்று குறுஞ் செய்தியை முதல்வருக்கு பதிவு செய்திருந்தார். முதலில், இந்த பதிவை அனைவரும் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். சிலர், முதல்வர் வரை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று பதிலளித்து வந்தனர்.
இதற்கிடைகியே, எஸ்.வி.சேகர் மீண்டும் தனது ட்விட்டரில், " ‘நான் தங்களுக்கு பதிவு பண்ணிய 3 மணி நேரத்துக்குள் 9 புதிய double toned பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகத்திலிருந்து ஒரு அதிகாரி வீட்டிற்கு வந்து மாற்றிக்கொடுத்து சென்றார். தங்களுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்' என்று பதிவு செய்தார்.
எஸ்.வி.சேகரின் இந்த இரண்டு பதிவுக்கு, நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
பொறுப்பான இடத்தில் இருந்து கொண்டு தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தி விட்டீர்கள்.
ஆவின் பால் மீது நம்பிக்கை இல்லாததுபோல் செய்து விட்டீர்கள்.
தவறான முன்னுதாரணம்
— S R (@Scorpion1033) April 27, 2020
அந்த கெட்டுப்போன பால ரிட்டன் கொடுத்துட்டீங்களா!?
— Fazi... (@fazi_twitz) April 27, 2020
அஸ்க்கு புஸ்க்கு. அதை நாங்க வைத்து பன்னீர் செய்வோம்.
— Priya Perumal (@PriyaPerumal8) April 27, 2020
தன்னம்பிக்கைக்கும் தலைக்கணத்துக்கும் ஒரு நூல் தான் வித்தியாசம்!
பால் கெட்டு போச்சுன்னு பால் வாங்கின இடத்தில முறையிடுவது தன்னம்பிக்கை!
CM ஐ டேக் பண்ணி பாலும் கிடைசுருச்சுண்ணு சொல்லறது தலைக்கனம்!
A1 இருந்திருந்தா நீங்க இருக்கற இடமே வேற????
— பாலாஜி B2BL! (@GbalajiB2BL) April 27, 2020
இன்னைக்கு மட்டும் பால் திரியட்டும்.
ஸ்ட்ரெயிட்டா பிரதமர்தான் pic.twitter.com/LTCAUWjhsi
— ♥️Fanz???????????? (@Rajaram1643) April 27, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.