/tamil-ie/media/media_files/uploads/2021/07/sabareesan-4.jpg)
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானதில் திமுகவின் சமூக ஊடக பிரசாரத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்றால் அது மிகையல்ல. திமுகவின் மீதான விமர்சனங்களுக்கு திமுக ஐடி விங் உடனடியாக பதிலடி கொடுத்தது. திமுகவின் பிரச்சாரங்களை வேகமாக மக்களிடம் எடுத்துச் சென்றது.
‘ஸ்டாலின் வராரு விடியல் தரப் போராரு’ என்ற முழக்கங்கள் மக்கள் மத்தியில் ஈர்ப்பானவையாக இருந்தன. திமுகவின் சமூக ஊடக பிரசாரங்களில் திமுக வழிய நடத்தியதில் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் முக்கிய பங்கு வகித்தார் என்று தமிழக அரசியல் களத்தில் வெளிப்படையாகவே பேசப்பட்டது. தேர்தல் சமயத்தில், சபரீசன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை அன்று திமுகவின் வெற்றி உறுதியானபோது மு.க.ஸ்டாலின் தனது மருமகன் சபரீசனுடன் சென்று பிரசாந்த் கிஷோர் குழுவினரை சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த நிகழ்வும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டது.
தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சான பிறகு, அவருடைய மருமகன் சபரீசனுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி அளிக்கப்படலாம் என்ற யூகங்கள் எழுந்தன. ஆனாலும், சபரீசன் எப்போதும் பொது வெளியில் முக ஸ்டாலின் மருமகனாக கட்சியிலோ ஆட்சியிலோ செல்வாக்கு செலுத்துபவராக தன்னை காட்டிக்கொண்டதில்லை. அதே நேரத்தில் சபரீசன் திமுகவில் ஒரு அதிகார மையமாக உருவானதும் நடந்தது. திமுகவில் சபரீசன் பணிகள் பெரும்பாலும் திரைக்கு பின்னாலே நடந்துவந்தன.
இந்த நிலையில்தான், திமுகவின் முகிய அமைச்சர்கள் அன்பில் மகேஷ், திண்டுக்கல் ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 3 பேரும் சபரீசன் பிறந்தநாளில் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம், முக்கிய அமைச்சர்கள் அன்பில் மகேஷ், திண்டுக்கல் ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சபரீசனுக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க அணிவகுத்து சென்றதால் சபரீசன் தமிழக அரசியல் களத்தில் சீனுக்கு வந்துள்ளார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின், மாப்பிள்ளை மரியாதைக்குரிய திரு. சபரீசன் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போது. pic.twitter.com/oWDdP16dto
— Anbil Mahesh (@Anbil_Mahesh) July 17, 2021
சபரீசனை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், “இன்று முதலமைச்சர் அவர்களின் மாப்பிள்ளை மரியாதைக்குரிய சபரீசன் அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மகிழ்வான தருணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று பிறந்தநாள் காணும் அன்பு சகோதரர் திரு. சபரீசன் அவர்களை சந்தித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டேன். pic.twitter.com/4pacrHiKnn
— MRK.Panneerselvam (@MRKPanneer) July 17, 2021
அதே போல, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “இன்று பிறந்தநாள் காணும் அன்பு சகோதரர் சபரீசன் அவர்களை சந்தித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டேன்.” என்று ட்விட்டரில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதே போல, திமுகவின் மூத்த அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமியும் சபரீசனை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளர். ஐ.பெரியசாமி சபரீசனை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த புகைப்படமும் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதே போல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது மருமகன் சபரீசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மருமகன் சபரீசன் அவர்களுக்கு தெண்பாண்டி சிங்கம்,கழக துணை பொதுசெயலாளர் ,அமைச்சர் ஐயா I.பெரியசாமிBA BGL அவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் . pic.twitter.com/AP3kbkiECk
— Pattra Mani Dmk. (@ManiPattra) July 17, 2021
இதுவரை திமுகவிலும் சரி தமிழக அரசியலிலும் சரி ஸ்டாலின் மருமகன் சபரீசன் திரைக்கு பின்னால் செயல்பட்டு வந்த நிலையில் அவருடைய பிறந்த நாளில் அமைச்சர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க அணிவகுத்ததன் மூலமாக சீனுக்கு வந்துள்ளார். விரைவில் பொது வெளியிலும் செயல்படுவார் என்று திமுக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.