Advertisment

சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு: சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை முதல் கொல்லை வரை சிறப்பு ரயில் இயக்கப்படுமனெ தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Changes in pattern of train services due to engineering works at Chennai Beach Yard announced check details in tamil

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர பூஜைகள் நடப்பு ஆண்டிற்காக தொடங்கப்படவுள்ளது.

Advertisment

இதனால், சபரிமலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், பக்தர்களின் வசதிக்காக சென்னை முதல் கொல்லம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுமென தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் 19, 26, டிசம்பர் 3,10,17,24 ,31, ஜனவரி 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11:20 மணிக்கு கிளம்பும் 06111 என்ற எண் கொண்ட ரயில், அடுத்த நாள் மதியம் 2:30 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது.

இதேபோல், மறுமார்க்கத்தில் நவம்பர் 20, 27, டிசம்பர் 4,11,18, 25, ஜனவரி 1, 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து மாலை 4:20 மணிக்கு கிளம்பும் 06112 என்ற எண் கொண்ட ரயில், மறுநாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காலை 11:35 மணிக்கு வந்தடைகிறது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sabarimala Special Trains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment