ஐயப்ப பக்தர்களுக்கு நற்செய்தி.. தமிழகம் வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்

கேரளாவில் உள்ள சபரிமலை நடைத்திறக்கும் போது தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்வது வழக்கம். இதுவரை சென்னையிலிருந்து காட்பாடி, சேலம், ஈரோடு, கோவை வழியாக கேரள மாநிலம் செங்கண்ணுார், திருவல்லா நகரங்களுக்கு ரயிலில் சென்று, அங்கிருந்து பத்தனம்திட்டா வழியாக பம்பைக்கு அதிகளவில் ஐயப்ப பக்தர்கள் தற்போது சென்று வருகின்றனர்.

Sabarimala Special Trains:

இந்நிலையில், தற்போது சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.விசாகப்பட்டினம் – கொல்லம் – விசாகப்பட்டினம் இடையே தமிழகம் வழியாக சபரிமலை சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து நவம்பர் 17, 20, 24, 27; டிசம்பர் 1, 4, 8, 15, 22, 25; மற்றும் ஜனவரி 5, 12, 15 ஆகிய தேதிகளில் இரவு 11:15 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் கொல்லத்தில் இருந்து நவம்பர் 19, 22, 26, 29; டிசம்பர் 3, 6, 10, 17, 24, 27; மற்றும் ஜனவரி 7, 14, 17ம் தேதிகளில் காலை 10மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் தமிழகத்தில் திருத்தணி, காட்பாடி, வாணியம்பாடி ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லம் – காக்கிநாடா டவுன் சுவிதா சிறப்பு ரயில், நவ., 17, 21, 25ல், காலை, 10:00 மணிக்கு, கொல்லத்திலிருந்து புறப்பட்டு, கோவை, ஈரோடு, சேலம் வழியே, அடுத்தநாள் மதியம், 2:50 மணிக்கு காக்கிநாடாவை அடையும். கொல்லம் – ஐதராபாத் சுவிதா சிறப்பு ரயில், நவ., 15 காலை, 3:00 மணிக்கு, கொல்லத்திலிருந்து கிளம்பி, கோவை, ஈரோடு, சேலம் வழியே, மறுநாள் காலை, 8:30 மணிக்கு, ஐதராபாத்தை அடையும்.

இந்த ரயில்களின் முன்பதிவு, இன்று (12.11.18) காலை, 8:00 மணிக்கு தொடங்குகியது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close