/indian-express-tamil/media/media_files/aL1Te6yltWQB5hE4cD5R.jpg)
Sabarimala Special Vande Bharat services
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு வெள்ளிக்கிழமை (டிச.15) முதல் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் - கோட்டயம் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் டிச.15, 17, 22, 24 தேதிகளில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் (எண்: 06151) மாலை 4.15 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.
மறுமார்க்கமாக கோட்டயத்தில் இருந்து டிச.16, 18, 23, 25 தேதிகளில் அதிகாலை 4.40 மணிக்கு புறப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் (எண்: 06152) மாலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் பெரம்பூா், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம் வழியாக இயக்கப்படும்.
இதுபோல் காச்சிக்கூடா - கொல்லம் இடையே டிச.18 முதல் ஜன.15-ஆம் தேதி வரை திங்கள்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 07109) இயக்கப்படவுள்ளது. மறுமார்க்கமாக டிச.20 முதல் ஜன.17-ஆம் தேதி வரை புதன்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 07110) இயக்கப்படவுள்ளது.
இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டுக்கு வியாழக்கிழமை (டிச.14) காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.