Advertisment

'கொரோனா இல்லை சான்று' கட்டாயம் : சபரிமலை பக்தர்களுக்கு தமிழக அரசின் வழிமுறை

இந்த பதிவுக்கு, தரிசன நேரத்துக்கு முன்பு 24 மணி நேரத்துக்குள் பெறப்பட்ட ‘கொரோனா தொற்றின்மை சான்று’ கட்டாயம் ஆகும்.

author-image
WebDesk
New Update
'கொரோனா இல்லை சான்று' கட்டாயம் : சபரிமலை பக்தர்களுக்கு தமிழக அரசின் வழிமுறை

மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவமபர் 15ம் தேதியன்று திறக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில், தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

இது குறித்து வெளியிடப்பட்ட வழிமுறைகளில், "கொரோனா தொற்று காரணமாக, சபரிமலை பயணத்தின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கேரள அரசு வகுத்துள்ளது. அதன்படி, அனைத்து பக்தர்களும் கேரள காவல் துறையின் மெய்நிகர் வரிசைக்கான இணையதளத்தில் (https://sabarimala online.org) பதிவு செய்ய வேண்டும். தொடக்கத்தில், வார நாட்களில் 1,000 பேர், வார இறுதி நாட்களில் 2,000 பேர் மட்டுமே முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவு செய்ய முடியும். இந்த பதிவுக்கு, தரிசன நேரத்துக்கு முன்பு 24 மணி நேரத்துக்குள் பெறப்பட்ட ‘கொரோனா தொற்றின்மை சான்று’ கட்டாயம் ஆகும்.

கடந்த காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அனுமதி இல்லை. இதயநோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவுபோன்ற பிற இணை நோய் உள்ளவர்கள் எந்த வயதினரானாலும் அனுமதி இல்லை. காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் உள்ளவர்கள் பயணத்தை தவிர்க்கவும்.

பயணத்தின்போது முகக் கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு உபயோகித்து கழுவ வேண்டும்.

அனைத்து பிரதான நுழைவுவாயில்களிலும் கட்டண அடிப்படையில் ஆன்டிஜென் சோதனை வசதிகள் செய்யப்பட்டிருக்கும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை போன்றவற்றை வைத்துள்ளவர்கள் அவற்றை கொண்டுவர வேண் டும்.

நெய் அபிஷேகம் செய்யவோ, பம்பை ஆற்றில் குளிக்கவோ, சந்நிதானம், பம்பை, கன்னிமூல கணபதி கோயில் ஆகிய இடங்களில் இரவு தங்கவோ அனுமதி இல்லை. எருமேலி, வடசேரிக்கரா ஆகிய 2 வழிகளில் மட்டுமே தமிழக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த வழிமுறைகளை தமிழ கத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 25ம் தேதி, நாடு தழுவிய முழு அடைப்பு காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது. 6 மாதங்களுக்குப் பிறகு கேரளா மாநிலத்தில் கோவில்கள் திறக்கப்பட்டாலும், சபரிமலை ஐயப்பன்கோவில் திறக்கப்படவில்லை.  கடந்த மாதம்  மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. மாதாத்திர பூஜைக்காக, 5 நாட்கள் மட்டும் நடை திறக்கப்பட்ட நிலையில் நாள்தோறும் 250 பக்தர்கள் மட்டுமே கடும் கட்டுப்பாடுகளுக்குப்பின் அனுமதிக்கப்பட்டனர்.

Sabarimala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment