New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/09/supreme-court-7591.jpg)
Tamil Nadu News Today
ஸ்டாலின், கனிமொழி, கமல்ஹாசன், மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு
Tamil Nadu News Today
சபரிமலை தீர்ப்பு : இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திரசூட், ஆர்.எஃப். நரிமன் மற்றும் ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் பெண்களை கேரளா சபரிமலை ஆலயத்திற்குள் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பினை வழங்கினார்கள். நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார்.
இந்த தீர்ப்பிற்கு பலதரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருக்கார்.
'ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்' என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது.
சமூக நீதி-பாலின சமத்துவம்-பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இத்தீர்ப்பு மைல்கல்! #Sabarimala
— M.K.Stalin (@mkstalin) 28 September 2018
திமுக எம்.பி.கனிமொழி கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும் என்று ட்வீட் செய்துள்ளார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. குறிப்பாக,கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என்று நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும். பாராளுமன்றமும், சட்டமன்றங்களும்,இதை பின்பற்றி,பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) 28 September 2018
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தன்னுடைய முகநூலில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் அறிக்கையினை வெளியிட்டிருக்கிறார். அதில் வழிபடும் உரிமை மட்டும்மல்லாது அர்ச்சனை செய்யும் உரிமையும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
சபரிமலையில் பெண்கள் வழிபடலாம்!
உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை pic.twitter.com/uTtcA7mMkU
— Dr Ravikumar (@WriterRavikumar) 28 September 2018
பாஜக கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தன்னுடைய ட்விட்டர் பகுதியில் இந்த தீர்ப்பினை வரவேற்பதாக கருத்து தெரிவித்திருக்கிகிறார்.
I am happy that SC has decided that gender equality in worship is to be followed in Sabarimalai. This what I had been advocating
— Subramanian Swamy (@Swamy39) 28 September 2018
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த வழக்கு குறித்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சபரி மலை கோவிலுக்குள் பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பினை வரவேற்பதாக மதுரை ஆதினம் குறிப்பிட்டிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.