Advertisment

சேடிஸ்ட் பிரதமர் vs சாடஸ்ட் ஸ்டாலின்: தமிழிசை சவால்

தமிழகம் மீது அக்கறை கொண்டவர் மோடி. தமிழகத்தை பற்றி என்னிடம் பிரதமர் அடிக்கடி விசாரித்து இருக்கிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live

Tamil Nadu News Today Live

பிரதமர் மோடியை 'சாடிஸ்ட் பிரதமர்' என்று விமர்சனம் செய்ததற்காக, சாடஸ்ட் (Saddest) ஸ்டாலின் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

Advertisment

திமுக எம்எல்ஏ மஸ்தான் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு பேசிய போது, "கருணாநிதி சிலை திறப்பு விழாவிலே நான் போது, பிரதமர் மோடியை சேடிஸ்ட் என்று நான் சொன்னேன், அதை சொல்லலாமா சொல்லக் கூடாதா என்பது இன்றைக்கு ஒரு விவாத பொருளாகி இருக்கிறது.

நான் சொன்னதில் என்ன தவறு? மோடி அவர்களை தனிப்பட்ட முறையில் நான் சேடிஸ்ட் என்று சொல்லவில்லை. அவர் பிரதமராக இருக்கிறார். பிரதமர் என்று சொன்னால் ஓட்டு போட்டவர்களுக்கும் அவர் தான் பிரதமர், ஓட்டு போடாதவர்களுக்கும் அவர் தான் பிரதமர். ஓகி புயலிலே வர்தா புயலிலே இப்பொழுது நடந்து இருக்கக்கூடிய கஜா புயலிலே தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பாதிப்புக்கள் ஏற்பட்டு இருக்கின்றது.

அதுவும் அண்மையில் ஏற்பட்ட கஜா புயலால் 65 பேர்கள் மாண்டுபோய் இருக்கிறார்கள், அதற்கு ஏதாவது ஒரு ஆறுதல் செய்தி பிரதமரிடத்தில் இருந்து வந்ததா? நேரடியாக வந்து பார்க்க அவசியமில்லை, காரணம் அவருக்கு நேரமில்லை, வெளிநாடு சுற்றுவதற்கே அவருக்கு நேரம் கிடையாது, அப்படிபட்ட நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார்.

ஆனால், அதே பிரதமர் குஜராத் மாநிலத்திலோ, மஹாராஷ்டிரா மாநிலத்திலோ ஏதேனும் துயரச்செய்தி வந்தால் உடனடியாக அவர் வருத்தம் தெரிவிக்கிறார், அனுதாபம் தெரிவிக்கிறார், இரங்கல் தெரிவிக்கிறார், ஏன் வெளிநாட்டில் ஏதேனும் சம்பவங்கள் நடந்தால் கூட, அமெரிக்காவில், அதே மாதிரி போர்ச்சுக்கலில் சில சம்பவங்கள் ஏற்பட்ட நேரத்தில் தீ விபத்துக்கள் ஏற்பட்ட நேரத்தில், துப்பாக்கிச் சூடு ஏற்பட்ட நேரத்தில் உடனடியாக அனுதாபம் தெரிவித்து செய்தி வெளியிடுகிறார்.

ஆனால், தமிழ்நாட்டில் 65 பேர் மாண்டுபோய் இருக்கிறார்கள். இன்னும் 25 ஆண்டுகள் ஆகும் அங்கே விவசாயிகளின் சிரிப்பை பார்க்க, அங்கே வாழ்க்கை வளத்தை உருவாக்கிக் கொள்வதற்கு. அந்தளவிற்கு விவசாயம் அங்கு அழிந்து போய் இருக்கிறது. டெல்டா பகுதிகளில் ஏறக்குறைய 8 மாவட்டங்களில் இந்தக் கொடுமை நடந்து இருக்கிறது, அதை நேரடியாக பிரதமர் வந்து பார்க்க வேண்டாமா? பதினைந்து ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைக்கிறது.

ஆனால், வழங்கி இருக்கக்கூடிய தொகை முன்னூறு கோடி ரூபாய், அதுவும் முன்னூறு கோடி ரூபாய் நிவாரணத்திற்காக வழங்கப்பட்டு இருக்கிறதா என்று கேட்டால் அதுவும் கிடையாது.

தமிழ்நாட்டு மக்களை கேவலப்படுத்துகிற, தமிழ்நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாத நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார் என்று சொன்னால், நான் தனிப்பட்ட மோடியை அல்ல, பாஜக மோடியை அல்ல பிரதமராக இருக்கக்கூடிய மோடியை சொல்கிறேன். "சேடிஸ்ட் தான், சேடிஸ்ட் தான், சேடிஸ்ட் தான்" என நான் ஒரு முறை அல்ல பலமுறை சொல்வேன்’’ என பேசினார்.

இந்த நிலையில், இன்று டெல்லியில் இருந்து வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் பிரதமர் மோடி, தமிழக பாஜக நிர்வாகிகளிடம் பேசினார். இந்த ஆலோசனையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் இனிதான் பாஜக விஸ்வரூபம் எடுக்க உள்ளது. திமுகாவா, பாஜகவா என்று இனி பார்க்கலாம். நீங்களா, நாங்களா என பார்ப்போம். இனி அவர்களுடன்தான் எங்கள் போட்டி.

கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பிரதமர் இரங்கல் தெரிவிக்கவில்லை என திமுக தலைவர் கூறுவது தவறு. ஸ்டாலின் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார். சிறுபான்மை மக்களை பாஜக மதிக்கிறது. ஆனால் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசுவதில்லை. பாஜக சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுகிறது என்று கூறுவது சுத்த பொய்.

தமிழகம் மீது அக்கறை கொண்டவர் மோடி. தமிழகத்தை பற்றி என்னிடம் பிரதமர் அடிக்கடி விசாரித்து இருக்கிறார். மோடி போன்ற நல்லவர் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அது தேர்தலிலும் எதிரொலிக்கும். எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் செல்லுபடியாகாது.

பிரதமர் மோடியை 'சாடிஸ்ட்' என கூறிவரும் ஸ்டாலின் கூறி வருகிறார். பிரதமர் மோடி சாடிஸ்ட் கிடையாது. மோடியை அப்படி கூறும் ஸ்டாலின் இனிமேல் 'சாடஸ்ட் ஸ்டாலின்' என அழைக்கப்படுவார்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Narendra Modi Tamilisai Soundararajan M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment