விரைவில் தேர்தலில் போட்டி : ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அதிரடி

Sagayam IAS Pressmeet : விரைவில் எமது இளைஞர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பை வெளியிடுவார்கள் என முன்னாள் ஐஏஸ் அதிகாரியும், மக்கள் பாதை அமைப்பின் வழிகாட்டியுமான சகாயம் ஐஏஎஸ்

By: January 17, 2021, 11:09:25 AM

விரைவில் எமது இளைஞர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பை வெளியிடுவார்கள் என முன்னாள் ஐஏஸ் அதிகாரியும், மக்கள் பாதை அமைப்பின் வழிகாட்டியுமான சகாயம் ஐஏஎஸ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என பெயரெடுத்தவர் சாகாயம். புதுக்கோட்டையை சேர்ந்த இவர், முதலில் தமிழக அரசின் சிறிய துறைகளில் பணியாற்றி, பின்னர் பதவி உயர்வு மூலம் ஐஏஎஸ் பணிக்கு தேர்வானவர். இவர் கடைசியாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பணியாற்றி வந்தார். தனது நேர்மையின் காரணமாக பல்வேறுஇன்னல்களை சந்தித்த அவர், கடந்த வாரம் விருப்ப ஓய்வு பெற்றதாக அறிவித்தார்.

மேலும் தனது விருப்ப ஓய்வு குறித்து கருத்து பேசிய அவர், நேர்மையாக செயல்பட்ட என்னை ஏன் விருப்ப ஓய்வு பெறுகிறீர்கள் என்று ஒருமுறைகூட நேரில் அழைத்து பேசவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தனது ஜனவரி 31-ம் தேதி காந்தி மறைந்த தினத்தில் தனக்கு விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த்தாகவும், இந்த கோரிக்கையை அரசு நிராகரித்த்த காரணத்தால், விருப்ப ஓய்வு பெற்றதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் பாதை அமைப்பின் சார்பாக திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் பண்டிகையில் சகாயம் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார். அங்கு நடைபெற்ற குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்த சகாயம் அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து மக்கள் பாதை அமைப்பின் இளைஞர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என தெரிவித்தார். மேலும் தன் எந்த ஒரு நெருக்கடியும் இல்லாமல் தனிப்பட்ட காரணங்களுக்காவே தான் ஓய்வு பெற்றதாகவும், விரைவில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

சகாயம் ஐஏஎஸ் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் பாதை என்ற அமைப்பில் வழிகாட்டியாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Sagayam ias said contest on assembly election soon

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X