எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய ‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லையற்ற மகிழ்சியை வெளிப்படுத்திய தேவி பாரதி இந்த விருது தனக்கு உத்வேகத்தை தரும் என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் சாகித்ய அகடாமி நிறுவனம் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில், தமிழ் மொழியில், எழுதாளர் தேவி பாரதி எழுதிய ‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்கு 2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருதும், பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் தேவி பாரதியின் இயற்பெயர் ராஜசேகரன். ஈரோடு மாவட்டம், கஸ்பாபேட்டையை பூர்வீகமாக கொண்ட எழுத்தாள தேவி பாரதி, தமிழில் நிழலின் தனிமை, நொய்யல் , அற்ற குளத்து அற்புத மீன்கள், உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.
நவீன தமிழ் இலக்கிய உலகில் ஆண்டுகளாக எழுதி வருகிறார். சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் தேவி பாரதியின் ‘நீர்வழிப் படூஉம்’ நாவலை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எழுத்தாளர் தேவி பாரதி எல்லையற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், சாகித்ய அகாடமி விருது இன்னும் தனக்கு உத்வேகத்தை தரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பிற மொழிகளிலும் 2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்காப்பட்டுள்ளது. மலையாள மொழியில் எழுத்தாளர் இ.வி. ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு மொழியில் எழுத்தாளர் பதஞ்சலி சாஸ்திரிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னட மொழியி எழுத்தாளர் லட்சுமிஷா தொல்பதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி மொழியில் எழுத்தாளர் சஞ்சீவ்-விற்கு சாக்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“