/tamil-ie/media/media_files/uploads/2019/05/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-13.jpg)
writer thoppil Mohamed Meeran
writer thoppil Mohamed Meeran : பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தோப்பில் முகமது மீரான் (74) உடல்நல குறைவால் இன்று காலமானார்.
தமிழ் மற்றும் மலையாள எழுத்தாளரான தோப்பில் முகமது மீரான் 1997 ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தை சேர்ந்த தோப்பில் முகமது மீரான் நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் வசித்து வந்தார்.
இவர் பல்வேறு புதினங்கள், சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார். சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.இந்நிலையில் முகமது மீரான் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை 1.20க்கு காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முகமது மீரான் உடல் நெல்லை வீரபாகுநகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தோப்பில் முகமது மீரான் உடல் இன்று மாலை நெல்லை பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்படுகிறது.
5 புதினங்கள், 6 சிறுகதைகள், சில மொழிபெயர்ப்பு நூல்களை முகமது மீரான் எழுதியுள்ளார். இதுவரை தோப்பில் முகமது மீரான் வாங்கிய விருதுகள் சுருக்கமாக உங்கள் பார்வைக்கு..
சாகித்திய அகாதமி விருது - சாய்வு நாற்காலி (1997)
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது
இலக்கியச் சிந்தனை விருது
லில்லி தேவசிகாமணி விருது
தமிழக அரசு விருது
அமுதன் அடிகள் இலக்கிய விருது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது.
இவர் எழுதிய அன்புக்கு முதுமை இல்லை, தங்கரசு, அனந்தசயனம் காலனி போன்ற சிறுகதை தொகுப்புகள் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவை ஆகும். அதே போல் அஞ்சுவண்ணன் தெரு, கூனன் தோப்பு, ஒரு கடலோரக் கிராமத்தின் கதை போன்றவை தோப்பில் முகமது மீரான் படைப்பில் வெளிவந்த ஆகச்சிறந்த நூல்கள் ஆகும்.
மீனவ கிராமங்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வை அடிப்படையாக கொண்ட ஒரு கடலோரக் கிராமத்தின் கதை நூல் இன்றளவு பல இலக்கியவாதிகள் அதிகம் போற்றக்கூடிய படைப்பாகும். தோப்பில் முகமது மீரானின் இழப்பு இலக்கிய உலகில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை.
.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.