சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. அப்போது சைதை துரைசாமி மிகவும் உருக்கமாக பேசி உள்ளார்.
அவர் பேசியதாவது ” என்னுடைய ஒரு மகன் போனாலும் எனக்கு பக்கபலமாக இங்கு கூடி இருக்கும் மகன் மற்றும் மகள்கள் இருக்கிறார்கள். சக மனிதனுக்காக வாழ வேண்டும். சமூக நீதி என்பது பொருளாதாரத்தால் தடைபடக் கூடாது . அரசால் அங்கீகரிக்கப்பட்ட 259 சாதிகளில் 170 சாதிகளை சார்ந்தவர்கள் மட்டுமே அரசப் பணியில் இருகின்றனர்.
மீதியுள்ள சாதியினரும் அரசுப் பணியில் அமர வைப்பதுதான் ஒரே லட்சியம். இதை என்னுடைய மகன் மறைவில் நான் உறுதிமொழி ஏற்கிறேன். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருந்து தங்களது வேலையை தள்ளிவைத்துவிட்டு இங்கே வந்துள்ளதற்கு மிகவும் நன்றி. நான் சோர்வடைய மாட்டேன் இன்னும் மன உறுதியுடன் செயல்படுவேன். இன்று வந்திருக்கும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற அதிகாரிகளை நான் என் மகன் மற்றும் மகளாக பார்த்து இன்னும் உறுதியோடி செயல்படுவேன்” என்று கூறினார்.