/indian-express-tamil/media/media_files/FzF8K06w0Y4k79DOESFb.jpg)
இமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற இடத்தில் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கினார்.
இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்றிருந்த வெற்றி துரைசாமியின் கார், சட்லஜ் ஆற்றில் விழுந்து சில நாள்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் நிகழ்விடத்திலே உயிரிழந்த நிலையில், வெற்றி துரைசாமியின் நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், வெற்றி துரைசாமியின் நிலை இன்னும் அறிப்படாமல் உள்ளது.
கடந்த 4 நாட்களாக இந்திய கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு குழு, இந்தோ திபெத்திய படை, ராணுவம் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், அவர் சம்பந்தப்பட்ட உடைமைகள் பொருள்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பாறை பகுதிகளில் திசு போன்ற உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இது யாருடையது என்பது குறித்து டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெற்றி துரைசாமியின் உடை மற்றும் சூட்கேஸ் உள்ளிட்ட உடைமைகள் கிடைத்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.