தமிழக பா.ஜ.க.வை சேர்ந்த பெண் உறுப்பினர்களான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கவுதமி ஆகியோரை ஒருமையில் தரைகுறைவாக பேசியதற்காக திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற திமுகவின் பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவை சேர்ந்த பெண் உறுப்பினர்களான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கவுதமி குறித்து ஒருமையில் அவதூறாக பேசினார்.

இதுதொடர்பான வீடியோ மக்கள் மத்தியில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு குஷ்பு உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதற்கு திமுக எம்.பி. கனிமொழி மன்னிப்பு கேட்டிருந்தார்.
இதனால் காவல்துறை சைதை சாதிக் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், ஆபாசமாக பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால், சைதை சாதிக் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும், முன்ஜாமீன் கோர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil