காசோலை மோசடி வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம் குமார் மற்றும் அவரின் பேரன் துஷ்யந்த் ஆகியோர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றம் பிணையில் வெளிவரக் கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
ராம் குமாரின் மகன் துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் நிர்வகிக்கக் கூடிய நிறுவனம் ஒன்று மயிலாப்பூரை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் வர்த்த தொடர்பு வைத்திருந்தது.
இந்த நிலையில் துஷ்யந்த் அளித்த ரூ.15 லட்சம் மதிப்பிலான இரண்டு காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திருப்பி வந்துவிட்டது. இது தொடர்பாக துஷ்யந்த் மீது புகார் எழுந்த நிலையில், அவருக்கு ஆதரவாக பணத்தை தருவதாக ராம் குமார் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆனால் ராம்குமார், துஷ்யந்த் ஆகியோர் கொடுத்த வாக்குறுதியின்படி பணத்தை திருப்பி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் ராம்குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த் ஆகிய இருவருக்கு எதிராக பிணையில் வெளிவரக் கூடிய வகையிலான பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்தப் பிடிவாரண்டுக்கு எதிராக இருவரும் நீதிமன்றத்தில் மனு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil