சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரையில் 3.2 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்கப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக அண்ணா சாலையில் உள்ள நடைபாதைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
துறை அதிகாரி கூறுகையில், ஒய்எம்சிஏ எதிரே உள்ள நடைபாதையில் உள்ள கிரானைட் கற்களை அகற்றும் பணியை ஏற்கனவே தொடங்கியுள்ளோம். இந்த இடத்தில் பாதசாரிகள் நடமாட்டம் அதிகம் இல்லை. 600 மீ தூரத்திற்கு ஸ்லாப் கற்களை அகற்றி உள்ளோம்.
கீழே உள்ள கான்கிரீட் வடிகாலின் மேற்பரப்பு போக்குவரத்தை தாங்கும் என்றால், அதை அப்படியே விட்டுவிடுவோம். கேபிள்கள் ஏதேனும் இருந்தால், அவைகளை மாற்றி வைப்போம். ஸ்லாப்கள் சேமிக்கப்பட்டு, பணிகள் முடிந்ததும் மீண்டும் அமைக்கப்படும் என்றார்.
மேலும் பேசிய அவர், "சைதாப்பேட்டையில் உள்ள நடைபாதைகள் அகற்றப்படாது. பெரும்பாலான பாதசாரிகள் அந்தப் பகுதியில் உள்ள நடைபாதைகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதிக பாதசாரிகள் நடமாடும் இடங்களில் நடைபாதைகளுக்கு இடையூறு ஏற்படாமல் பணி செய்வோம். சி.ஐ.டி நகரிலும் இதே போன்று நடைபாதை அகற்றப்படும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“