/indian-express-tamil/media/media_files/2025/01/01/Lua7fC1emPj7Tt6OZbUq.jpg)
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம்: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. அதேநேரம், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. எனவே, அந்த தொழிற்சங்க பணியாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வருவார்கள். இதனால், குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, தமிழகத்தில் நாளை வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் அதற்குரிய மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். முழுமையாக பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.