New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/22/OiCcGeSeNB6GElraoCXo.jpg)
போராட்டத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளம் கட்: கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவு
விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisment
இந்நிலையில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யவும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ரேஷன் பணியாளர்களின் விவரங்களை பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ரேஷன் பணியாளர்களுக்கு No Work No Pay என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்கும் பணியாளர்களுக்கு பதிலாக உரிய மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.