/indian-express-tamil/media/media_files/2025/04/22/Mksk5dY3vEMNIZoKrAMG.jpg)
டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஏப்ரல் 22) வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் (ஏப்ரல் 22) நடைபெற்ற அமர்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி, தாம் நிர்வகித்து வரும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, "தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள், ஆக மொத்தம் 23,629 மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள். இந்த பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம், மேற்பார்வையாளர்களுக்கு ரூ. 2000, விற்பனையாளர்களுக்கு ரூ. 2000, மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ. 2000 என, ஒன்றாம் தேதி முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஒரு ஆண்டுக்கு ரூ. 64.08 கோடி கூடுதல் செலவாகும்" என்று அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.