சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்கி வந்த ஜப்பானின் முன்னணி செல்போன் நிறுவனமான நோக்கியா தொழிற்சாலை மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய பல கோடி ரூபாயை பாக்கி வைத்தது. இதையடுத்து, அரசு மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, நோக்கியா ஆலை மூடப்பட்டது.
Advertisment
அந்த பணத்தை வசூலிக்க அரசு தீவரமாக நடவடிக்கை மேற்கொண்டது. அந்த ஆலையை மீண்டும் செயல்படுத்த மத்திய - மாநில அரசுகள் முயற்சி செய்து வந்தன. சுமார் பத்து ஆண்டுகளாக அந்த ஆலை மூடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பின்லாந்து நாட்டை சேர்ந்த சால்காம்ப் (Salcomp) என்ற நிறுவனம் நோக்கியா வளாகத்தை கையகப்படுத்தி உள்ளது.
சால்காம்ப் நிறுவனம் செல்போன் உதிரிப்பாகங்களை தயாரிப்பதில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக செயல்படுகிறது. குறிப்பாக செல்போன் சார்ஜர்கள், அடாப்டர்கள் மற்றும் பல்வேறு உதிரிப்பாகங்கள் தயாரிப்பில் இந்நிறுவனம் முன்னணியில் உள்ளது. குறிப்பாக, ஆப்பிள் நிறுவனத்துக்கு தேவையான பெரும்பாலான உதிரிப்பாகங்களை சால்காம்ப் நிறுவனம்தான் தயாரித்து வழங்குகிறது.
ஏற்கனவே இந்த நிறுவனம் சென்னையில் இரண்டு இடங்களிலும், டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ஒரு இடத்திலும் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் iPhone XR மொபைலுக்கு சென்னை கிளையில் தான் பாகங்கள் தயாரிக்கப்படுகிறது. இப்போது நோக்கியா ஆலையை வாங்கி உள்ள சால்காம்ப் செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிலை அங்கு தொடங்க உள்ளது.
நோக்கியா ஆலை மற்றும் அதன் அருகே உள்ள லைட் ஆன் மொபைல் ஆகிய நிறுவனங்களையும் சால்காம்ப் வாங்கி இருக்கிறது. ரூ.350 கோடியில் இவை வாங்கப்பட்டு உள்ளன. அதாவது நோக்கியா ஆலையில் 55 சதவீத இடத்தை சால்காம்ப் நிறுவனம் வாங்கி இருப்பதாக அந்த நிறுவனத்தின் இந்திய மேலாண்மை இயக்குனர் சசிகுமார் தெரிவித்தார்.
நோக்கியா ஆலை மொத்தம் 10 லட்சம் சதுரடி பரப்பளவு கொண்டது. அதில் உள்ள கட்டிடங்களை தனது உதிரிப்பாக உற்பத்திக்காக சால்காம்ப் பயன்படுத்துகிறது. அடுத்த ஆண்டு இதன் உற்பத்தியை தொடங்க இருக்கிறது. அப்போது ரூ.2000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய உள்ளது.