salem 8 way road project : சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க, ₹10 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டத்திலும், சாலை அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதற்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும்,நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விசாயிகள், திட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தனர்.
அதில், சேலம்- சென்னை 8 வழிச்சாலைக்கான அரசாணையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.இந்நிலையில் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற திட்ட அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று அருண்மிஸ்ரா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் ஆஜராகி வாதிட்ட அரசு வழக்கறிஞர் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான எட்டுவழிச்சாலைத் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என வாதிட்டார்.அத்தைகைய திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்னரே சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும், அது வண்டியின் பின்னால் குதிரையை பூட்டுவதற்கு சமம் எனவும் தெரிவித்தார்.இந்த விவாதத்தை தொடர்ந்து வழக்கு வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
விவசாயிகள்,சமூக செயற்பாட்டாளர்களை தொடர்ந்து, பா.ம.க தலைவர், அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் இந்த திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். திட்டம் தொடங்குவதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் சந்தேகத்திற்கு இடமின்றி இப்பகுதியைப் பற்றி முழுமையான ஆய்வு தேவைப்படும் என்றும் அதற்கு முன்னர் ஒரு பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது.
திருக்குறள் போட்டி: 1,330 குறட்பாக்களை ஒப்புவிக்கும் சென்னை மாணவர்களுக்கு பரிசு
சேலத்தையும் சென்னையையும் இணைக்கும் 277.3 கி.மீ நீளமுள்ள எட்டு வழி பசுமை சாலை திட்டம் இரு நகரங்களுக்கிடையிலான பயண நேரத்தை பாதியாக இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.விவசாயிகள் உட்பட உள்ளூர்வாசிகளின் ஒரு பகுதியினரின் நிலத்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டம் ரிசர்வ் காடுகள் மற்றும் நீர்நிலைகள் வழியாக இயங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.