தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருவதாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை மீது, சேலம் நீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் பியூஸ் மனுஷ் தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடா்ந்துள்ளார்.
சேலத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பியூஸ் மனுஷ், சேலம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவா் எண் 4-க்கு செவ்வாய்க்கிழமை காலை வந்தார்.
அவரது புகாரில், ’பல சேனல்களிலும் சமூக ஊடக தளங்களிலும் ஒளிபரப்பப்பட்ட அண்ணாமலையின் உரையை நான் கண்டேன்.
கடந்த 1956 இல் நிகழ்ந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி பேசிய அண்ணாமலை, ’பார்வர்டு பிளாக் தலைவர் முத்துராமலிங்க தேவர் ’மத நம்பிக்கை இல்லாதவர்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்டவர்கள், இந்து மதத்தைப் பற்றி பேசினால், மதுரை மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகம் பதிலாக, மனித ரத்தம் அபிஷேகம் தான் செய்யப்படும்’ என்று, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மற்றும் நீதிக்கட்சி தலைவர் பி.டி.ராஜனை, எச்சரித்ததாக குறிப்பிட்டு பேசினார்.
ஆனால் முத்துராமலிங்கத் தேவர்அப்படி கூறியதாக உண்மையில் எந்தப் பதிவும் இல்லை. அண்ணாமலையால் இந்தக் கூற்றை முத்துராமலிங்கத் தேவர் கூறியதாக நிரூபிக்க முடியவில்லை என்றால், இந்து பெரும்பான்மை சமூகத்தை வன்முறைக்குத் தூண்டி, மத நம்பிக்கையில்லாதவர்களின் ரத்தத்தை அந்தந்த தெய்வங்களுக்கு அர்ப்பணிப்பதற்காக வேண்டுமென்றே அவர் இதைச் சொன்னார் என்றுதான் நாம் முடிவு செய்ய முடியும்.
ஒருவேளை இதை முத்துராமலிங்கத் தேவர் கூறியதாக அண்ணாமலை நிருபித்து விட்டால், நம்பிக்கை இல்லாதவர்களைக் கொல்லும்படி விசுவாசிகளைத் தூண்டிவிடுவதால் அது இன்னும் ஒரு குற்றமாகவே இருக்கும்.
இணையத்தில் பரவலாகப் பகிரப்படும் இந்த வீடியோ, நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு/பொது அமைதியில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
எந்தவொரு நபரும், அது எந்த உயரத்தில் இருந்தாலும், அல்லது எந்த பதவியில் இருந்தாலும், சட்டத்தின்படி சட்டவிரோதமான, அச்சுறுத்தும் மற்றும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட உரிமை இல்லை. இந்த அறிக்கை கட்டுக்கதை என்று கண்டறியப்பட்டால் குற்றம் ஆகிவிடும்.
எனவே உரிய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து நீதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று பியூஸ் மனுஷ் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.
பின்னா் வெளியே வந்த பியூஸ் மனுஷ் செய்தியாளா்களிடம் கூறுகையில்: பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலை, பொய்யான தகவல்களைத் தெரிவித்து மக்களிடையே வன்முறையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவா் மீது மூன்று வழக்குகள் தொடா்ந்துள்ளேன்.
முத்துராமலிங்க தேவா் பேசியதாக ஆதாரமில்லாத கருத்தைத் தெரிவித்து மக்களிடையே வன்முறையைப் பரப்பும் வகையில் அண்ணாமலை பேசியுள்ளார். இதுகுறித்து சேலம் காவல் துறையில் புகார் செய்தேன். ஆனால், போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. இதனால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வழக்குத் தொடா்ந்துள்ளேன் என்றார்.
இந்த வழக்கு டிசம்பர் 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.