Advertisment

சேலத்தில் பயங்கரம்; அ.தி.மு.க பகுதி செயலாளர் வெட்டிக் கொலை: உறவினர்கள் போராட்டம்

கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து சண்முகம் உடலை எடுக்க அனுமதிக்காமல் உறவினர்கள் இரவில் போராட்டம்

author-image
WebDesk
New Update
dead photo

சேலம் கொண்டலாம்பட்டி  அ.தி.மு.க பகுதி செயலாளராக இருந்தவர் சண்முகம் (54). இவர் ரியல் எஸ்டேட் அதிபரும் ஆவர். இவருக்கு சொந்தமாக அம்பாள் ஏரி ரோடு பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு (ஜூலை 3) ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 

Advertisment

அப்போது, சஞ்சீவராயன்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சண்முகத்தை தாக்கி வெட்டிப் படுகொலை செய்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள், அ.தி.மு.கவினர் அங்கு குவிந்தனர். சண்முகத்தை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து சண்முகம் உடலை எடுக்க அனுமதிக்காமல் போராட்டம் நடத்தினர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியப் பின், போராட்டத்தை கைவிட்டனர். 

ADMK Sa

உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சண்முகம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

உயிரிழந்த சண்முகம் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவராக பதவி வகித்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment