சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (49). இவர் அ.தி.மு.க கிளைச் செயலாளராக இருந்து வந்தார். இவர் நேற்றிரவு ஆத்தூர் அருகே நடைபயிற்சி சென்றார். இரவு வீடு திரும்பாத நிலையில் இன்று (ஆக.29) அதிகாலை 5.00 மணியளவில் அப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
/indian-express-tamil/media/media_files/P23CxbkXcrcntMhHtv34.jpg)
இதுகுறித்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஏத்தாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மக்கள் அளித்த தகவலிப் படி ஏத்தாப்பூர் போலீசார் அங்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“