சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளராக இருந்தவர் ஏ.வி. ராஜு. இவர் அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், கூவத்தூர் விவகாரத்தில் அ.தி.மு.க குறித்தும், நடிகை த்ரிஷா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏ.வி. ராஜு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகை த்ரிஷா தனது பக்கத்தில் கீழ்த்தரம், கேவலமான மனிதர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இதையடுத்து தான் த்ரிஷா குறித்து பேசவில்லை எனவும் தன்னை தவறாக சித்தரித்து காட்டி உள்ளனர் என்றும் தமது பேச்சால் த்ரிஷாவின் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் ஏ.வி ராஜு கூறினார்.
தொடர்ந்து, கூவத்தூர் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஏ.வி. ராஜுக்கு சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் வக்கீல் நோட்ஸ் அனுப்பி உள்ளார். அதில் ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க வழக்கறிஞர் இன்பதுரையும் நோட்ஸ் அனுப்பி உள்ளார். 24 மணி நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“