சேலம் மாவட்ட திமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்தான் அம்மாவட்டத்தில் கட்சியின் தோல்விக்கு காரணம் என்று திமுக அமைச்சர் கேன்.என். நேரு முன்னிலையில் அம்பலமாகியுள்ளது.
சேலம் மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாலருமான கே.என்.நேரு அண்மையில், சேலம் மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்தபோது, திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மாவட்ட திமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்களால், அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சிக்கு பெரும் தோல்வி ஏற்பட்டதாக பொதுவெளியில் ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் திமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் திமுக சேலம் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படவில்லை. ஒரு காலத்தில் திமுக கோட்டையாக இருந்த சேலம் மாவட்டத்தில் திமுக அடுத்தடுத்து தோல்வி அடைந்ததற்கு முக்கியக் காரணம், அங்குள்ள மாவட்டச் செயலாளர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என்று கூறுகின்றனர்.
சேலம் மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் பொதுவாக காணப்படக்கூடியது என்றாலும், சில நாட்களுக்கு முன்பு எஸ்.ஆர். பார்த்திபன் சொல்லும் வரை யாரும் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை. சில நாட்களுக்கு முன்பு, சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எஸ்.ஆர். பார்த்திபன், தேர்தலுக்கு முந்தைய அறிக்கையை நினைவு கூர்ந்து, அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில், சேலம் மாவட்டத்தில் திமுகவில் 4 மாவட்டங்களுக்கு இடையே போதிய ஒற்றுமை நிலவும் வரை மாவட்டத்தில் திமுக வெற்றி பெறாது. அதுவரை இந்த 4 மாவட்டங்களும் காகிதத்தில் மட்டுமே இருக்கும் என்று கூறியதாகத் தெரிகிறது.
இது குறித்து சேலம் மாவட்ட திமுக வட்டாரங்கள் கூறுகையில், “அமைச்சர் கே.என். நேருவும், தேர்தலில் கண்ணியமான் வெற்றியைப் பெற சேலத்தில் உள்ள திமுகவில் கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற எம்.பி.யின் கருத்தை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தியதாகத் தெரிவித்தார். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக தலைவர் வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்குப் பிறகு புகழ் பெற்றார். திமுக எம்.பி பார்த்திபனின் வெளிப்படையான இந்த பேச்சு, சமீபத்தில் அங்கு முன்னாள் எம்.எல்.ஏ ஆ.ராஜாவின் மறைவால் ஏற்பட்ட மாவட்டச் செயலாளர் பதவிக்கு அவர் போட்டியிடலாம் என்ற பேச்சுகளை எழுப்பியுள்ளது.
எப்படி இருந்தாலும், சேலம் மாவட்டத்தில் திமுகவின் தோல்விக்கு சேலம் மாவட்ட திமுகவில் நிலவும் உட்கட்சி பூசல்தான் காரணம் என்று அமைச்சர் கே.என். நேரு முன்னிலையிலேயே தெரிவிக்கப்பட்டது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.