சேலம் மாநகராட்சி ஆணையர் டி.கிறிஸ்துராஜ் தன்னை அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை என்று ட்விட்டரில் பரபரப்பு குற்றம்சாட்டிய திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன், அன்று இரவே ட்வீட்களை நீக்கிவிட்டு கமிஷனரைப் பாராட்டியிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த எஸ்.ஆர். பார்த்திபன் 2011 ஆம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தேமுதிக சார்பில், மேட்டூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அதன் பிறகு, அவர் தேமுதிகவில் இருந்து விலகி, திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதையடுத்து, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.ஆர். பார்த்திபன் திமுக சார்பில் சேலத்தில் போட்டியிட்டு எம்.பி ஆனார். தற்போது சேலம் எம்.பி ஆக உள்ள திமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர். பார்த்திபன், “சேலம் மாநகராட்சியில் நடக்கும் எனை புறக்கணிக்கிறார். என்னை புறக்கணிப்பது எனக்கு வாக்களித்த 20 லட்சம் மக்களையும் புறக்கணிப்பதற்கு சமம். நான் போராட்டக்காரன் என்பதனை அனைவரும் அறிந்த ஒன்று. இதை சம்பந்தப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்” ட்விட்டரில் தொடர் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், “சேலம் மாநகராட்சி கமிஷனர் நான் ஏதோ ஒரு எதிர்க்கட்சி எம்.பி என்று நினைக்கிறார் போலும்” என்று சேலம் மாநகராட்சி கமிஷனர் டி.கிறிஸ்துராஜ் மீது பரபரப்பு குற்றம் சாட்டினார்.
சேலம் மாநகராட்சி கமிஷனர் மீது குற்றம்சாட்டி திமுக எம்.பி எஸ்.ஆர். பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில், பதிவிட்டிருந்ததாவது: “சேலம் மாநகராட்சியில் நடக்கும் எனை புறக்கணிக்கிறார். என்னை புறக்கணிப்பது எனக்கு வாக்களித்த 20 லட்சம் மக்களையும் புறக்கணிப்பதற்கு சமம். நான் போராட்டக்காரன் என்பதனை அனைவரும் அறிந்த ஒன்று. இதை சம்பந்தப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்
சுயமரியாதை என் உயிருக்கு மேலானது. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பி.க்கு அழைப்பு கொடுக்கக் கூடாது. அதையும் மீறி அதிகாரிகள் அழைப்பு கொடுத்தால், அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். ஊழல் இல்லாத நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள் கழகத் தோழர்கள், நிர்வாகிகள் நன்கு அறிவார்கள்.

ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நான் ஒரு எம்.பி.மக்கள் பணிகளை செய்ய விடாமல் தடுப்பது சட்ட விரோதமானது. சேலம் மாநகராட்சி கமிஷனர் நான் ஏதோ ஒரு எதிர்க்கட்சி எம்.பி என்று நினைக்கிறார் போலும்” என்று சேலம் மாநகராட்சி கமிஷனர் மீது பரபரப்பு குற்றம் சாட்டினார்.
சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன் தன்னை அரசு விழாக்களில் புறக்கணிக்கிறார்கள் என்று பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியது. மேலும், திமுகவில் கோஷ்டி அரசியல் தலைதூக்கியுள்ளது என்று எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில், எஸ்.ஆர். பார்த்திபன் தான் பதிவிட்ட ட்வீட்களை வெள்ளிக்கிழமை இரவே தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கினார். மேலும், தனது புதிய ட்வீட்களில், “சேலம் மாநகராட்சி நடத்தும் அனைத்து விழாக்களுக்கும் நான் அழைக்கப்படுவதை வரவேற்கிறேன். “சேலம் மாநகராட்சி கமிஷனர் நல்ல வேலைக்காகப் பெயர் பெற்றவர். மக்களுக்காக உழைப்பதே எங்கள் நோக்கம். முதல்வர் வழியை பின்பற்றி மு.க. ஸ்டாலின், நாங்கள் பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபனின் பரபரப்பு குற்றச்சாட்டு ட்வீட்களைத் தொடர்ந்து, கட்சித் தலைமையில் இருந்து விசாரிக்கப்பட்டதாகவும் அரசுப் பணிகளுக்கு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், எம்.பி., தனது ட்வீட்களை நீக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து ஊடகங்கள்ல் எஸ்.ஆர் பார்த்திபனிடம் கருத்து கேட்டதற்கு,எதிர்காலத்தில் நடக்கும் விழாக்களுக்கு அவர் அழைக்கப்படுவார் என்று கூறப்பட்டதாகவும், மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியானது.
சேலம் மாநகராட்சி ஆணையர் டி.கிறிஸ்துராஜ் தன்னை அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை என்று ட்விட்டரில் பரபரப்பு குற்றம்சாட்டிய திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன், அன்று இரவே ட்வீட்களை நீக்கிவிட்டு கமிஷனரைப் பாராட்டியிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”