சேலம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட இராமநாயகன் பாளையம் காரமடை திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன்.
விவசாயியான இவர்களின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பாரதிய ஜனதா கட்சியின் இலக்கிய அணி சேலம் மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் குணசேகரன் செயல்பட்டுவருவதாக குற்றஞ்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும், தொடர்பாக காவல் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் வழக்குகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விவசாயி கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருக்கு அமலாக்கத்துறை தரப்பில் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நோட்டீஸில் சம்பந்தப்பட்ட விவசாயியின் சாதி பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமலாக்கத் துறைக்கும் நிலப் பிரச்னைக்கும் என்ன தொடர்பு என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“