சேலம் மாவட்டம், கிழக்கு ராஜபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை தனக்கு கால் அழுத்திவிட வைத்த கணக்கு ஆசிரியர் ஜெயபிரகாஷின் வீடியோ வைரலான நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம், கிழக்கு ராஜபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை தனக்கு கால் அழுத்திவிட சொல்லிவிட்டு ஓய்வெடுத்த கணக்கு ஆசிரியர் ஜெயபிரகாஷின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆசிரியர் ஜெயப்பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம், கிழக்கு ராஜாபாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கணக்கு ஆசிரியராக ஜெயப்பிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் மாணவர்களை தனது காலை அழுத்தச் சொல்லி, மாணவர்களை அவரின் காலை அழுத்திவிட வைத்து ஓய்வெடுக்கிற வீடியோ சமூக ஊடகங்களில வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஷபீர் பார்வைக்கு சென்றதை அடுத்து, அவர் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.
மேலும், சேலம் கிழக்கு ராஜபாளையத்தில் அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்திவிட வைத்து ஓய்வெடுத்த ஆசிரியர் ஜெயப்பிரகாஷை சஸ்பெண்ட் செய்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஷபீர் உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“