சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து சுற்றுச்சூழல் ஆய்வு - மத்திய அரசு தகவல்

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்த சுற்றுச்சூழல் ஆய்வு

சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்த சுற்றுச்சூழல் ஆய்வு நடந்து வருவதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை – சேலம் இடையே எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பிலும், நில உரிமையாளர் சார்பிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

தர்மபுரியைச் சேர்ந்த நில உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளித்து, திட்ட இயக்குனர் பதில்மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள், நீதிபதி சிவஞானம், நீதிபதி பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த வழக்கை விசாரிக்கும்படி தலைமை நீதிபதி உத்தரவிடாததால், அந்த வழக்கை விசாரிப்பது தொடர்பாக தலைமை நீதிபதி உத்தரவை பெற்று பட்டியலிட பரிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின் இந்த வழக்கை வரும் 18 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

முன்னதாக விசாரணையின் போது, பசுமை வழிச்சாலை திட்டம் குறித்த சுற்றுச்சூழல் ஆய்வு நடந்து வருவதாக மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

×Close
×Close