/indian-express-tamil/media/media_files/2025/07/15/karunanidhi-statue-2025-07-15-10-28-51.jpg)
Salem
சேலம் மாநகரின் மையப்பகுதியான அண்ணா பூங்கா முன்பு, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் மு. கருணாநிதியின் 16 அடி உயர பிரம்மாண்டமான வெண்கலச் சிலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுவப்பட்டது.
இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் இந்த சிலையை அவமதிக்கும் நோக்கில் அதன்மீது கருப்பு நிற பெயிண்ட்டை ஊற்றியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சிலையை ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். சிலை அவமதிப்பு சம்பவம் குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது. இந்த செயலை யார் செய்தார்கள், அவர்களின் நோக்கம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்ணா பூங்கா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.