scorecardresearch

எஸ்.ஐ தாக்கினார்… வீடியோவில் அறிவித்துவிட்டு சாமியார் மரணம்

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சாமியார் ஒருவர் தன்னை போலீஸ் எஸ்.ஐ தாக்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துகொள்வதாக வீடியோ வெளியிட்ட நிலையில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

salem man commits suicide, சேலம், சாமியார் தற்கொலை, salam samiyar suicide video, samiyar suicide alleged police si tortured, edappadi, எஸ்ஐ தாக்கியதால் சாமியார் தற்கொலை

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சாமியார் ஒருவர் தன்னை போலீஸ் எஸ்.ஐ தாக்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துகொள்வதாக வீடியோ வெளியிட்ட நிலையில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே தேவூர் குண்டாங்கல்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாமியார் சரவணன். இவர் தன்னை எஸ்.ஐ. அந்தோணி அடித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டார். என்னோட இந்த முடிவுக்கு எஸ்.ஐ அந்தோணி மைக்கெல்தான் காரணம் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு காணாமல் போனார்.

அந்த வீடியோவில், சாமியார் சரவணன் கூறியிருப்பதாவது, “எஸ்.ஐ அந்தோணி மைக்கேல், என்னை ரொம்ப அடிச்சு மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டார். அதனால், என்னோட இந்த துரதிர்ஷ்ட முடிவுக்கு வேறு யாரும் காரணமில்லை, அந்தோணி மைக்கேல்தான் காரணம். அவர் அதிகார தோரணையில் எதை வேண்டுமானாலும் பண்ணலாம் என்று நினைக்கிறார். எப்படியாவது இந்த வீடியோவை எல்லா மக்களும் பார்க்கட்டும். அதிகாரத்திலிருக்கும் அத்தனை பேரையும் என் ஆன்மா இதுக்குமேல சும்மா விடாது.

என் சாபத்திலிருந்து நீ, உன்னோட குடும்பம் தப்பவே முடியாது. சிவன் மேல ஆணையாகச் சொல்கிறேன். என்னோட மனசு எப்படி பாடுபடும்… அப்பா உன்கிட்ட வரேன்ப்பா… சிவ சிவ… நமசிவாயா…” என்று தெரிவித்துள்ளார்.

சாமியார் சரவணன் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் காணாமல் போன நிலையில், சமூக ஊடகங்களில் வெளியான அவருடைய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சாமியார் சரவணன் குடியிருப்புக்கு அருகே மறைவான பகுதியில் அழுகிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

எஸ்.ஐ. மைக்கேல் அந்தோணி தன்னை தாக்கியதால் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சாமியார் சரவணன் பேசிய வீடியோ வெளியாகி இருந்த நிலையில் அவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

சாமியார் குறித்து அவருடைய உறவினர்கள் கூறியதாவது, 47 வயதான சாமியார் சரவணனுக்கு மனைவி சாந்தி, மகள் கவிதா மகன் சங்கர் என குடும்பம் உள்ளது. காவி வேட்டி கட்டிக்கொண்டு தாடி வளர்த்துக்கொண்டும் இருந்த சரவணன் வேறு எந்த வேலைக்கும் போகாமல் சாமியாடுவது, குறி சொல்லுவது, பேய் ஓட்டுவது என இருந்துள்ளார்.

சாமியார் சரவணன் தனது வீட்டுக்குத் தண்ணீர்த் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டிய இடத்துக்கு அருகே சிவன் போட்டோவைவைத்து, ருத்ராட்ச மாலையை போட்டு பேய் ஓட்டும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், இவரைத் தேடி பக்தர்கள் வந்துள்ளனர்.

இந்நிலையில், தேவூர் காவல் நிலைய எஸ்.ஐ அந்தோணி மைக்கேல், ஆகஸ்ட் 14-ம் தேதி சாமியார் சரவணனின் வீட்டுக்கு வந்து அவரை அடித்துத் துன்புறுத்தியதாக சரவணனின் உறவினர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, சாமியார் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டுவிட்டு காணாமல் போனார். அதற்குப் பிறகு, அவரை குடும்பத்தினர், உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று இரவு அவர் வீட்டுக்கு அருகே உள்ள கரட்டுப் பகுதியில் அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் என்று அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலும், தந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அரசு உதவ வேண்டும். சாமியார் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவருடைய உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து, எஸ்.ஐ. அந்தோணி மைக்கேல் கூறுகையில், சாமியார் சரவணன் பெண்களை குழிக்குள் வைத்து நிர்வாண பூஜை செய்வதாக தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும், எஸ்.ஐ கூறுகையில், “அங்கே ஒரு மறைவான இடத்தில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் சாமியார் சரவணனும் குமாரபாளையத்தைச் சேர்ந்த 2 பெண்களும் உடகாந்திருந்தனர். அவர்கள் 3 பேரும் மது போதையில் இருந்தார்கள. அவர்களை விசாரித்தபோது, தாங்கள் கணவருக்கு தெரியாமல் பேய் ஓட்டுவதற்காக வந்ததாகவும் அவர்கள் மது குடித்தால் பேய் போய்விடும். இல்லையென்றால் பேய் அவர்களைக் கொன்றுவிடும் என்று கூறியதால் சரவணன் அவர்களை மது குடிக்கச் செய்துள்ளார். பின்னர், சாமியார் சரவணனிடம், இனிமேல் இது போல செய்யக் கூடாது. தாடியை ஷேவ் செய்துவிட்டு வேலைக்கு போக வேண்டும். தவறான செயலில் ஈடுபடக் கூடாது என்று கூறிவிட்டு வந்தேன் மற்றபடி நான் எதுவும் செய்யவில்லை” என்று எஸ்.ஐ. அந்தோணி மைக்கேல் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சாமியார் சரவணன தேவூர் காவல் நிலைய எஸ்.ஐ அந்தோணி மைக்கேல் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Salem man commits suicide before video released alleged police si tortured

Best of Express