ஆச்சாங்குட்டப்பட்டி தனியார் நர்சிங் கல்லூரியில் மதிய உணவு சாப்பிட்ட 50க்கு மேற்பட்ட மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உணவு பார்காப்புத்துரை அதிகரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் அயோத்திப்பட்டிணம் அருகே, ஆச்சாங்குட்டப்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் வெளி மாவட்டம் மற்றும் உள்ளூர் மாணவர்களில் என 100-க்கு மேற்பட்ட மாணவிகள் நர்சிங் பயிண்று வருகினறனர். இதில் வெளிமாவட்டத்தில் இருக்கு படிக்கும் மாணவிகளுக்கு மருத்துவமனை அருகிலேயே விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாணவர்களில் விடுதியில் தங்கி இந்த கல்லூரியில் பயிண்று வரும் நிலையில், அவர்களுக்கு உணவும் விடுதியிலேயே கொடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இன்று உணவு சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் வாந்தி மயக்கம் என உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடயே, மாணவிகள் உடல்நல பாதிப்பு தொடர்பாக, காவல்துறையினர் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உணவு முறையாக சமைக்கப்பட்டதா? மாணவிகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், உணவு சமைத்த ஊழியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினரிடமும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவிகள் சாப்பிட்ட உணவு, மற்றும் சமைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தண்ணீர் மாதிரிகளை சோதனைக்காக எடுத்துள்ளனர். முறையான அனுமதி இல்லாமல் உணவு கூடாரம் செயல்பட்டு வந்ததாக தெரியவந்துள்ள நிலையில், உணவு சமைக்கும் கூடாரத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும், தண்ணீரில் கழிவு நீர் கலப்பது போன்று தெரியவந்துள்ளதாலும், உணவு கூடாரத்திற்கு தற்காலிகமாக சீல் வைத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“