Advertisment

கோவையைப் போல சேலத்திலும் சோகம்: ஆம்னி பஸ் விபத்தில் 6 பேர் பலி

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சின்னநடுப்பட்டியில் நடந்த விபத்தில் பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ஓமலூர் காவல் துறையினர் வழக்கு பதிவி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கோவையைப் போல சேலத்திலும் சோகம்: ஆம்னி பஸ் விபத்தில் 6 பேர் பலி

Salem Omalur Tourist pilgrimage bus accident : சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சின்னநடுப்பட்டியில் நடந்த விபத்தில் பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ஓமலூர் காவல் துறையினர் வழக்கு பதிவி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்தியன்2 விபத்து Live : கமல், ஷங்கர் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல்

விபத்து குறித்த முழு விவரம்:  

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து ராஜஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா மினி பேருந்து, இரவுஓய்வு எடுப்பதற்காக  சேலம் சின்னநடுப்பட்டி காளியம்மன் கோவில் மண்டபம் நோக்கி திருப்பப்பட்டது. அப்போது,    பெங்களூரிலிருந்து கேரளா செல்லும் "ஆரஞ்ச்" என்கிற தனியார் ஆம்னி சொகுசுப் பேருந்து இந்த  சுற்றுலா மினி பேருந்து மீது வேகமாய் மோதியது.

இதனால் சம்பவ இடத்திலேயே பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 20க்கும் மேற்பட்டவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

 

விபத்து நடந்த இடத்தில் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபகணிக்கர், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஸ்குமார், ஓமலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் நேரில் சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

அவிநாசி விபத்து : இறந்தவர்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள அவசர உதவி எண் அறிவிப்பு!

விபத்து குறித்து ஓமலூர் காவல் துறையினர் வழக்கு பதிவி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

Tamilnadu Salem
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment