சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) கே.தங்கவேல் 2006 ஆம் ஆண்டு கணினி அறிவியல் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த குழுவை அமைக்குமாறு தமிழக அரசை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 10, 2006 அன்று பெரியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியராக தங்கவேல் நியமிக்கப்பட்டார். இந்த பணியிடத்திற்கு விண்ணப்பித்த தங்கவேல் திண்டுக்கல் காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தில், 1989 மற்றும் 2006 க்கு இடையில் கணிதத்துறையில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். பெரியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர் பணிக்கு, ஐந்து பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற நான்கு பேரை தேர்வுக்குழு நிராகரித்தது. மேலும், கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்ற தங்கவேல் கணினி அறிவியல் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டார், என்று கூறி ஆசிரியர் சங்கம் தங்கவேலின் நியமனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும், தங்கவேல் நியமனம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு குழு அமைக்க வேண்டும். விசாரணைக் குழுவில் உள்ளூர் நிதி தணிக்கை அதிகாரிகளை சேர்க்க வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரியுள்ளன என TOI செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், பல்கலை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில், 2000 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) விதிமுறைகளால் பரிந்துரைக்கப்பட்ட தங்கவேலின் கல்வித் தகுதி பொருத்தமானது அல்ல என தணிக்கை குழு முதன்முதலில் 2010-11 இல் தனது தணிக்கை அறிக்கையில் தெரிவித்தது. மேலும், தணிக்கையின் போது அவரது கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நியமனக் கோப்புகளை பல்கலைக்கழகம் சமர்பிக்கவில்லை என்றும் தணிக்கை குழு தெரிவித்தது.
தணிக்கை அதிகாரிகள் தங்கவேலின் சம்பள உயர்வு சம்பந்தப்பட்ட துறையில் பி.எச்.டி இல்லாமல் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். ஐந்தாண்டுகள் காத்திருந்து, 2015ல் தங்கவேலின் சேவைப் பதிவேட்டை தணிக்கை அதிகாரிகள் சரிபார்த்து அறிக்கை தயாரித்தனர். தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களுக்கு முன்கூட்டிய உயர்வு அனுமதிக்கப்படும். ஆனால் ஊக்க அதிகரிப்பு அவர் கணிதத்தில் பெற்ற பி.எச்.டி.,க்கு வழங்கப்பட்டது, என்று ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்தன.
இதனிடையே, 1999-2001 இல் தொலைதூர முறையில் MCA பட்டம் பெற்றேன். கணினி அறிவியலில் பி.எச்.டி இல்லை. ஆனால் 2015-16 ஆம் ஆண்டில் UGC இன் பொது அறிவிப்பின்படி, இடைநிலைப் பட்டங்கள் நியமனத்திற்கு சமமானதாகக் கருதப்படலாம். எனவே, எனது MCA பட்டம் கணினி அறிவியல் துறையைக் கையாள சமமான பட்டமாக கருதப்பட்டது. எனது விளக்கங்களுக்குப் பிறகு, உள்ளூர் தணிக்கை குழு 2019 இல் அதன் ஆட்சேபனைகளை நீக்கியது மற்றும் எனது நியமனம், ஊதிய நிர்ணயம் மற்றும் சேவையை ஏற்றுக்கொண்டது, தங்கவேல் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.